• Sep 17 2024

புத்த மதத்தை இழிவுபடுத்திய கிறிஸ்தவ போதகருக்கு எதிராக நடவடிக்கை- ஜனாதிபதி உத்தரவு.!samugammedia

Sharmi / May 15th 2023, 4:09 pm
image

Advertisement

மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கிறிஸ்தவ போதகரான ஜெரோம் பெர்னாண்டோ, தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

பொறுப்பற்ற கருத்துக்கள் மத முரண்பாடுகளை உருவாக்கி, நாட்டின் நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கக் கூடும் என்பதால் இது தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்நிலையில் போதகரின் கருத்துக்கள் தொடர்பான உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியின் ஆலோசகரான சாகல ரத்நாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

ஜெரோம் பெர்னாண்டோ என்ற போதகர் புத்தரை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்

அதாவது புத்தர் ஞானம் பெற்றுக் கொண்டு ஒளியை தேடியவர் என்றும் யேசு கிறிஸ்துவே அந்த ஒளி எனவும் போதகர் ஜெரோம் தெரிவித்திருந்தார்.

புத்தரும் யேசுவையே தேடியதாக போதகர் குறிப்பிட்டார். பௌத்தர்கள் அனைவருக்கும் யேசு கிறிஸ்து தேவை என்றும் போதகர் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

புத்த மதத்தை இழிவுபடுத்திய கிறிஸ்தவ போதகருக்கு எதிராக நடவடிக்கை- ஜனாதிபதி உத்தரவு.samugammedia மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கிறிஸ்தவ போதகரான ஜெரோம் பெர்னாண்டோ, தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.பொறுப்பற்ற கருத்துக்கள் மத முரண்பாடுகளை உருவாக்கி, நாட்டின் நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கக் கூடும் என்பதால் இது தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.இந்நிலையில் போதகரின் கருத்துக்கள் தொடர்பான உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியின் ஆலோசகரான சாகல ரத்நாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.ஜெரோம் பெர்னாண்டோ என்ற போதகர் புத்தரை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்அதாவது புத்தர் ஞானம் பெற்றுக் கொண்டு ஒளியை தேடியவர் என்றும் யேசு கிறிஸ்துவே அந்த ஒளி எனவும் போதகர் ஜெரோம் தெரிவித்திருந்தார்.புத்தரும் யேசுவையே தேடியதாக போதகர் குறிப்பிட்டார். பௌத்தர்கள் அனைவருக்கும் யேசு கிறிஸ்து தேவை என்றும் போதகர் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement