• Nov 25 2024

போலியாக வற் வரி அறவீடு செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை! அரசு கடும் எச்சரிக்கை

Chithra / Jan 11th 2024, 8:42 am
image

 

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்து கொள்ளாது போலியாக பெறுமதி சேர் வரியை வாடிக்கையாளர்களிடம் அறவீடு செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் நேற்று (09) இடம்பெற்ற வற் வரி விழிப்புணர்வு கருத்தரங்கில், கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

போலியாக வெற் வரி அறவீடு செய்து மோசடியாக இலாபமீட்டும் தரப்புக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களிடம் வரி அறவீடு செய்து அவற்றை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வழங்காதவர்கள் கண்காணிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பெறுமதி சேர் வரி செலுத்த வேண்டிய நிறுவனங்களை அடையாளம் கண்டு அவற்றில் பதிவு சான்றிதழை காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் எத்தகைய பொருளாதார நிலையில் இருந்தாலும் ஒவ்வொரு நபருக்கும் இந்த காலகட்டம் மிகவும் கஷ்டமானது என்று சொல்ல வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.


போலியாக வற் வரி அறவீடு செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை அரசு கடும் எச்சரிக்கை  உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்து கொள்ளாது போலியாக பெறுமதி சேர் வரியை வாடிக்கையாளர்களிடம் அறவீடு செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.நிதியமைச்சில் நேற்று (09) இடம்பெற்ற வற் வரி விழிப்புணர்வு கருத்தரங்கில், கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.போலியாக வெற் வரி அறவீடு செய்து மோசடியாக இலாபமீட்டும் தரப்புக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுமக்களிடம் வரி அறவீடு செய்து அவற்றை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வழங்காதவர்கள் கண்காணிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.பெறுமதி சேர் வரி செலுத்த வேண்டிய நிறுவனங்களை அடையாளம் கண்டு அவற்றில் பதிவு சான்றிதழை காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் எத்தகைய பொருளாதார நிலையில் இருந்தாலும் ஒவ்வொரு நபருக்கும் இந்த காலகட்டம் மிகவும் கஷ்டமானது என்று சொல்ல வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement