• Dec 09 2024

களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரின் அதிரடி நடவடிக்கை- மீட்கப்பட்ட முக்கிய பொருட்கள்..!

Sharmi / Sep 14th 2024, 12:10 pm
image

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துலாவ பிரதேசத்தில் 10 வாள்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம்(13) இடம்பெற்றது.

களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கித்துலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாள்கள் அனைத்தும் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவதற்காக  வைக்கப்பட்டிருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரின் அதிரடி நடவடிக்கை- மீட்கப்பட்ட முக்கிய பொருட்கள். களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துலாவ பிரதேசத்தில் 10 வாள்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம்(13) இடம்பெற்றது.களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கித்துலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாள்கள் அனைத்தும் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவதற்காக  வைக்கப்பட்டிருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement