• Mar 01 2025

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு குழு ஒன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை; ஜனாதிபதி அநுர தெரிவிப்பு..!

Sharmi / Feb 28th 2025, 6:17 pm
image

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு  குழு ஒன்றை நியமிப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் பாதாள உலகம் கோஷ்டிகளின் செயல்கள் காரணமாக சமூகத்தில் ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறீர்கள் அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் நாட்டு மக்களின் அன்றாட செயல்பாடுகளை நடத்திச் செல்வதில் என்ற தடைகளும் இல்லை தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தலை இரண்டு பக்கமாக பார்க்க வேண்டும் அதில் ஒரு பக்கம் தான் இனவாதம்.

அந்த இனவாதம் இனிமேல் ஒருபோதும் இங்கு தலை உயர்த்தாது அதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகின்றோம்.

அதேபோன்று இந்த பாதாள உலகம் குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு சில விடயங்கள் தேவை அதற்கான நடவடிக்கைகளையும் நாம் எடுத்து வருகிறோம்

1978 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதற்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் நாங்கள்.

வடக்கு கிழக்கில்  இருக்கின்ற தலைவர்களும் அதற்கு எதிராக குரல் கொடுத்தார்கள் தற்போதைய தேசிய பாதுகாப்பு பிரச்சினைக்கு புதிய சட்டங்களை நாங்கள் கொண்டு வர வேண்டி இருக்கிறது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு ஒரு குழு ஒன்றை நியமிப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இதற்காக எமது அரசாங்கம் தான் தீவிர முயற்சியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நீங்கள் யாராவது ஒரு பாதாள உலகம் பெயரை கூறினால் அவருக்கு பின்னால் இருக்கின்ற அரசியல்வாதியை என்னால் கூற முடியும்.

அதுதான் மறக்க முடியாத ரகசியம் இது மக்களுக்கும் தெரியும்.

மித்தினைப் பிரதேசத்தில் தந்தையும் அவரது பிள்ளைகளும் கொலை செய்யப்பட்டார்கள் அவர்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் போலீசார் ஒருவரும் இருக்கிறார். கல்கிசையில் இடம் பெற்று சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் T 56 ரக துப்பாக்கியை பறித்துக் கொண்டு சென்று பாதாள உலகம் குழுவிடம் கொடுக்கின்றார்கள். அப்படி  சம்பவங்களும் இருக்கின்றன அத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர்களும் இந்த பாதுகாப்பு இந்த பாதாள உலகம் குழுவினருடன் தொடர்பை வைத்திருக்கிறார்கள்

ஒரு ராணுவ முகாமில் இருந்து 75 துப்பாக்கிகள் களவாடப்பட்டு இந்த பாதாள உலகம் குழுவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது தற்பொழுது 35 துப்பாக்கிகள் கைப்பற்றிருக்கின்ற இன்னும் 35 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட வேண்டி இருக்கிறது.

இன்றும் கட்டுக்க தோட்டத்தில் ஒரு பிஸ்டல் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. இவ்வாறு குற்றவாளிகள் நிறைந்த ஒரு நாடாக இந்த நாடு தள்ளப்பட்ட வரலாறு தான் இடம்பெற்றிருக்கிறது.

நீதிபதிகள் இருக்கிறார்கள் சட்டத்தரணிகள் இருக்கிறார்கள் ஆனால் வெளி உலகத்திற்கு ஆயுதம் தாங்கிய குழுக்கள் இருக்கிறார்கள். அதற்கு உதவும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள் அதற்கு உதவும் சட்டத்தரணிகள் இருக்கிறார்கள் என்று தான் தெரியும்

ஒரு சட்டத்தரணி குற்றவாளி ஒருவரின் வழக்கு முடிந்தால் அடுத்த வழக்குக்கு செல்வார் ஆனால் தற்பொழுது குற்றவாளிகளின் வழக்கு முடிவடைந்தால் அவர்களுடைய வீட்டிற்கு சட்டதரணி செல்லும் நிலைமை ஒன்று காணப்படுகிறது

புகைக்குள் இருப்பது போன்று பாதாள உலகம் கும்பல்களோடு இவர்கள் இருந்து இருக்கிறார்கள் ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நாட்டில் பாதாள உலகம் கோஷ்டிகளை முற்றாக துடைத்தெறியும் என்பதை நான் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று கூட்டுக் குற்றவாளிகள் மிகவும் சுதந்திரமாக சுற்றி தெரியும் வேளையில் நாங்கள் அந்த குழுவின் உறுப்பினர்களுக்கு இந்த அரசாங்கம் ஒருபோதும் வளைந்து கொடுக்காது இடம் அளிக்காது என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்.


பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு குழு ஒன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை; ஜனாதிபதி அநுர தெரிவிப்பு. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு  குழு ஒன்றை நியமிப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் பாதாள உலகம் கோஷ்டிகளின் செயல்கள் காரணமாக சமூகத்தில் ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறீர்கள் அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நாட்டு மக்களின் அன்றாட செயல்பாடுகளை நடத்திச் செல்வதில் என்ற தடைகளும் இல்லை தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தலை இரண்டு பக்கமாக பார்க்க வேண்டும் அதில் ஒரு பக்கம் தான் இனவாதம்.அந்த இனவாதம் இனிமேல் ஒருபோதும் இங்கு தலை உயர்த்தாது அதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகின்றோம். அதேபோன்று இந்த பாதாள உலகம் குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு சில விடயங்கள் தேவை அதற்கான நடவடிக்கைகளையும் நாம் எடுத்து வருகிறோம்1978 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதற்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் நாங்கள். வடக்கு கிழக்கில்  இருக்கின்ற தலைவர்களும் அதற்கு எதிராக குரல் கொடுத்தார்கள் தற்போதைய தேசிய பாதுகாப்பு பிரச்சினைக்கு புதிய சட்டங்களை நாங்கள் கொண்டு வர வேண்டி இருக்கிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு ஒரு குழு ஒன்றை நியமிப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இதற்காக எமது அரசாங்கம் தான் தீவிர முயற்சியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.நீங்கள் யாராவது ஒரு பாதாள உலகம் பெயரை கூறினால் அவருக்கு பின்னால் இருக்கின்ற அரசியல்வாதியை என்னால் கூற முடியும். அதுதான் மறக்க முடியாத ரகசியம் இது மக்களுக்கும் தெரியும்.மித்தினைப் பிரதேசத்தில் தந்தையும் அவரது பிள்ளைகளும் கொலை செய்யப்பட்டார்கள் அவர்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் போலீசார் ஒருவரும் இருக்கிறார். கல்கிசையில் இடம் பெற்று சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் T 56 ரக துப்பாக்கியை பறித்துக் கொண்டு சென்று பாதாள உலகம் குழுவிடம் கொடுக்கின்றார்கள். அப்படி  சம்பவங்களும் இருக்கின்றன அத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர்களும் இந்த பாதுகாப்பு இந்த பாதாள உலகம் குழுவினருடன் தொடர்பை வைத்திருக்கிறார்கள்ஒரு ராணுவ முகாமில் இருந்து 75 துப்பாக்கிகள் களவாடப்பட்டு இந்த பாதாள உலகம் குழுவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது தற்பொழுது 35 துப்பாக்கிகள் கைப்பற்றிருக்கின்ற இன்னும் 35 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட வேண்டி இருக்கிறது.இன்றும் கட்டுக்க தோட்டத்தில் ஒரு பிஸ்டல் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. இவ்வாறு குற்றவாளிகள் நிறைந்த ஒரு நாடாக இந்த நாடு தள்ளப்பட்ட வரலாறு தான் இடம்பெற்றிருக்கிறது. நீதிபதிகள் இருக்கிறார்கள் சட்டத்தரணிகள் இருக்கிறார்கள் ஆனால் வெளி உலகத்திற்கு ஆயுதம் தாங்கிய குழுக்கள் இருக்கிறார்கள். அதற்கு உதவும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள் அதற்கு உதவும் சட்டத்தரணிகள் இருக்கிறார்கள் என்று தான் தெரியும்ஒரு சட்டத்தரணி குற்றவாளி ஒருவரின் வழக்கு முடிந்தால் அடுத்த வழக்குக்கு செல்வார் ஆனால் தற்பொழுது குற்றவாளிகளின் வழக்கு முடிவடைந்தால் அவர்களுடைய வீட்டிற்கு சட்டதரணி செல்லும் நிலைமை ஒன்று காணப்படுகிறதுபுகைக்குள் இருப்பது போன்று பாதாள உலகம் கும்பல்களோடு இவர்கள் இருந்து இருக்கிறார்கள் ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நாட்டில் பாதாள உலகம் கோஷ்டிகளை முற்றாக துடைத்தெறியும் என்பதை நான் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று கூட்டுக் குற்றவாளிகள் மிகவும் சுதந்திரமாக சுற்றி தெரியும் வேளையில் நாங்கள் அந்த குழுவின் உறுப்பினர்களுக்கு இந்த அரசாங்கம் ஒருபோதும் வளைந்து கொடுக்காது இடம் அளிக்காது என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement