• May 02 2024

யாழ் தீவக மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை...! அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு...!

Sharmi / Apr 19th 2024, 4:39 pm
image

Advertisement

யாழ் தீவகத்தில் அமையவுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் அப்பகுதி மக்களிற்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில்  கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அனலைதீவு உள்ளிட்ட சில தீவுகளில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.

அந்த மின் உற்பத்தி நிலையங்கள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படாது. அதனால் அந்த பகுதியில் உள்ள மக்களிற்கு குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில்  கலந்துரையாடவுள்ளதாக  அவர் தெரிவித்தார்.

அதனுடன், கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படவுள்ள மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்திகள் அனுராதபுரம் மின் கட்டமைப்புடன் இணைக்கப்படுவதால் எவ்வித பாதிப்பும் இல்லை. சிலர் குழப்புவதற்காக இவ்வாறு கூறுகின்றனர்.

விரைவில் அதானி தரப்பினரை சந்திக்க உள்ளேன். அந்த சந்திப்பில் பல்வேறு விடயங்களை பேசவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.


யாழ் தீவக மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை. அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு. யாழ் தீவகத்தில் அமையவுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் அப்பகுதி மக்களிற்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில்  கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அனலைதீவு உள்ளிட்ட சில தீவுகளில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.அந்த மின் உற்பத்தி நிலையங்கள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படாது. அதனால் அந்த பகுதியில் உள்ள மக்களிற்கு குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில்  கலந்துரையாடவுள்ளதாக  அவர் தெரிவித்தார்.அதனுடன், கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படவுள்ள மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்திகள் அனுராதபுரம் மின் கட்டமைப்புடன் இணைக்கப்படுவதால் எவ்வித பாதிப்பும் இல்லை. சிலர் குழப்புவதற்காக இவ்வாறு கூறுகின்றனர்.விரைவில் அதானி தரப்பினரை சந்திக்க உள்ளேன். அந்த சந்திப்பில் பல்வேறு விடயங்களை பேசவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement