• Apr 19 2026

600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை - சதொச மூலம் மக்களுக்கு சலுகை

Chithra / Mar 26th 2026, 10:25 am
image

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.


இந்த விசேட விலை குறைப்புத் திட்டத்தின் கீழ் உள்ள பொருட்கள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக பொதுமக்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, 


பண்டிகை காலங்களில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் எனக் குறிப்பிட்டார்.


பண்டிகை காலத்தில் எவ்வித தட்டுப்பாடுமின்றி அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்


600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை - சதொச மூலம் மக்களுக்கு சலுகை எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.இந்த விசேட விலை குறைப்புத் திட்டத்தின் கீழ் உள்ள பொருட்கள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக பொதுமக்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, பண்டிகை காலங்களில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் எனக் குறிப்பிட்டார்.பண்டிகை காலத்தில் எவ்வித தட்டுப்பாடுமின்றி அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement