• Mar 19 2025

இலங்கையில் அதானியின் திட்டங்கள் - தொடரும் கலந்துரையாடல்

Chithra / Mar 18th 2025, 9:39 am
image

 

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்து அதானி தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய திட்டங்கள் தொடர்பாக அதானி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையே இன்னும் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாக  செய்திகள் வெளியாகியுள்ளது.

அந்தத் திட்டங்களுக்கான கட்டணங்கள் தொடர்பாக பரஸ்பர உடன்பாட்டை எட்டுவதற்கு பொருத்தமான விவாதங்கள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின் திட்டத்திலிருந்து கட்டணப் பிரச்சினை காரணமாக விலகுவதாக அதானி நிறுவனம் சமீபத்தில் எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்கியிருந்தது.

இருப்பினும், கேள்விக்குரிய திட்டத்தை முற்றிலுமாக நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இலங்கையில் அதானியின் திட்டங்கள் - தொடரும் கலந்துரையாடல்  இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்து அதானி தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தொடர்புடைய திட்டங்கள் தொடர்பாக அதானி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையே இன்னும் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாக  செய்திகள் வெளியாகியுள்ளது.அந்தத் திட்டங்களுக்கான கட்டணங்கள் தொடர்பாக பரஸ்பர உடன்பாட்டை எட்டுவதற்கு பொருத்தமான விவாதங்கள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின் திட்டத்திலிருந்து கட்டணப் பிரச்சினை காரணமாக விலகுவதாக அதானி நிறுவனம் சமீபத்தில் எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்கியிருந்தது.இருப்பினும், கேள்விக்குரிய திட்டத்தை முற்றிலுமாக நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now