• Jul 18 2025

புதிய கல்வி சீர்திருத்தங்களில் அழகியல் பாடங்கள் நீக்கப்படவில்லை; கல்வியை அரசியலாக்க வேண்டாம் – பிரதமர் எச்சரிக்கை

Chithra / Jul 17th 2025, 1:12 pm
image


புதிய கல்வி சீர்திருத்தங்களில் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற பொய்யான மற்றும் அரசியல் நோக்கமுடைய பிரச்சாரங்கள் பரப்பப்படுவது மிகவும் கவலைக்குரியது என  பிரதமர்  ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று (17) நடைபெற்ற  நிகழ்வில் பிரதமர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ், வரலாறு, அழகியல் மற்றும் ஒரு தொழிற்கல்வி பாடம்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இவை நீக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. 

மனித குணங்கள் வளர, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பாடங்கள் அவசியமானவை. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் இவை கட்டாயமாக வழங்கப்படும்.

அதோடு, கல்வியை அரசியலாக்கும் நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்.

கல்வி மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். நாம் அரசியலில் ஈடுபடலாம். ஆனால் கல்வியையும், குழந்தைகளையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. என குறிப்பிட்டுள்ளார். 

புதிய கல்வி சீர்திருத்தங்களில் அழகியல் பாடங்கள் நீக்கப்படவில்லை; கல்வியை அரசியலாக்க வேண்டாம் – பிரதமர் எச்சரிக்கை புதிய கல்வி சீர்திருத்தங்களில் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற பொய்யான மற்றும் அரசியல் நோக்கமுடைய பிரச்சாரங்கள் பரப்பப்படுவது மிகவும் கவலைக்குரியது என  பிரதமர்  ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.மேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று (17) நடைபெற்ற  நிகழ்வில் பிரதமர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ், வரலாறு, அழகியல் மற்றும் ஒரு தொழிற்கல்வி பாடம்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவை நீக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. மனித குணங்கள் வளர, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பாடங்கள் அவசியமானவை. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் இவை கட்டாயமாக வழங்கப்படும்.அதோடு, கல்வியை அரசியலாக்கும் நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்.கல்வி மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். நாம் அரசியலில் ஈடுபடலாம். ஆனால் கல்வியையும், குழந்தைகளையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. என குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement