கொக்குதொடுவாய், கொக்குளாய், கர்நாட்டுக்கேணி மக்கள் விவசாய அறுவடை செய்யப்பட்ட நெல்லும், அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்த நிலங்களும் அழிவடைந்துள்ளதாகவும் அதற்கு அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலே காரணம் எனவும் இன்றையதினம் விவசாயிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொக்குதொடுவாய், கொக்குளாய், கர்நாட்டுக்கேணி மக்கள் விவசாயம் செய்யும் அக்கரைவெளி, எரிஞ்சகாடு, சுகந்தாமுறிப்பு, கன்னாட்டி ஆகிய இடங்களுக்கு செல்லும் வீதி தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இதனால் குறித்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளதோடு அறுவடை செய்த நெற்களை கடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டிற்கு பின்னர் குறித்த பகுதி வீதி புனரமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் விவசாயம் செய்து அறுவடை செய்த நெல்லை வீட்டிற்கு கொண்டு செல்லமுடியாது குறித்த பகுதி விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்துள்ளார்கள். இந்நிலையில் இவ் வருடம் இறுதியாக நடந்த கரைதுறைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் குறித்த பாதையினை மதிப்பீடு செய்து 100மீற்றர் தூரம் தற்காலிக புனரமைப்பு செய்து தரும்படி கோரியிருந்தும் புனரமைப்பு செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் 4700 பை அறுவடை செய்த நெல்லும், 2700 ஏக்கர் பயிர்நிலமும் அழிவடைந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து விவசாயி ஒருவர் கூறும் போது 2012 இல் இருந்து விவசாயம் செய்து வருகின்றோம்.
அன்று தொடங்கி இன்றி வரை வீதி புனரமைப்பு செய்யப்படவில்லை. அந்நேரமும் நாம் விவசாயம் செய்து அறுவடை செய்த நெல்லை கடல்மார்க்கமாகவும் , பல வாகனங்கள் ஊடகவும் தான் சிறிது சிறிதாக கொண்டு போகின்றோம். ஆனால் இவ்வாறு செய்வதனால் விவசாயிகளுக்கு எந்த இலாபமும் கிடைப்பதில்லை.இதனால் கடந்த கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த பாதையில் 100மீற்றர் தூரம் தற்காலிக புணரமைப்பு செய்து தரும்படி கோரியிருந்நதாம் தற்காலிகமாக வீதியினை புணரமைத்து தந்தால் மட்டுமே நெல்லை கொண்டுவரலாம். அவ்வாறு செய்யாவிடில் அவ்வளவு நெல்லும் அழிவடையும் என கூறியிருந்தோம்.
ஆனால் இதுவரை குறித்த பாதை புணரமைக்கப்படவில்லை. தற்போது அரச அதிகாரிகளின் அசண்டையீனத்தால் மழைவெள்ளம் ஒருபுறம் இருக்க அறுவடை செய்த நெல்லை வீட்டுக்கு கொண்டு செல்லமுடியாத நிலை இருக்கின்றது. அத்தோடு அறுவடை செய்த நெல்லினை யானை இரவு வேளைகளில் சாப்பிடுவதும், மழைநீரில் அடித்து செல்லப்படுவதும் என பல நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கின்றோம். அறுவடை செய்த நெல்லில் 100 பைகள் இதுவரை யானையால் கிழித்தெறியப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் எவ்வளவு வறுமைக்குள்ளும் நெல் விதைத்து, மருந்து, உரங்கள் போட்டு, நோயிலிருந்து, யானையில் இருந்து பாதுகாத்து அறுவடை செய்து கடைசியாக சாப்பாட்டுக்கே நெல் இன்றி தவிக்கும் அவல நிலைக்கு வந்துள்ளோம். இவ்வாறான விபரிதம் ஏற்படும் என அன்று அரச அதிகாரிகளுக்கு கூறியிருந்தும் அரச அதிகாரிகளின் அசண்டையீனத்தினால் எல்லாவற்றையும் இழந்துள்ளோம்.
4700 பை நெல் அறுவடை செய்து வயல் வெளிகளில் இருக்கின்றது. 2300 ஏக்கர் வயல் வெளிநிலங்கள், அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்து அழிவடைந்துள்ளது. அறுவடை செய்த நெல்லை நாம் கடத்த முடியாத நிலைதான் மற்றைய நிலங்கள் அழிவடைய காரணமாக இருந்துள்ளது. இவ்விடயங்களை நாம் தெரியப்படுத்தியும் அரச அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவில்லை. ஆகவே இவ் அழிவிற்கு சம்பந்தபட்ட அதிகாரிகளே பொறுப்பேற்று நஷ்ட ஈட்டினை அரசாங்கத்திடம் இருந்து பெற்று எமக்கு தரவேண்டும் .
முல்லைத்தீவில் அரச அதிகாரிகளின் அசண்டையீனத்தால் அழிவடைந்த விவசாய நிலங்கள். கொக்குதொடுவாய், கொக்குளாய், கர்நாட்டுக்கேணி மக்கள் விவசாய அறுவடை செய்யப்பட்ட நெல்லும், அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்த நிலங்களும் அழிவடைந்துள்ளதாகவும் அதற்கு அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலே காரணம் எனவும் இன்றையதினம் விவசாயிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொக்குதொடுவாய், கொக்குளாய், கர்நாட்டுக்கேணி மக்கள் விவசாயம் செய்யும் அக்கரைவெளி, எரிஞ்சகாடு, சுகந்தாமுறிப்பு, கன்னாட்டி ஆகிய இடங்களுக்கு செல்லும் வீதி தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இதனால் குறித்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளதோடு அறுவடை செய்த நெற்களை கடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 2012ஆம் ஆண்டிற்கு பின்னர் குறித்த பகுதி வீதி புனரமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் விவசாயம் செய்து அறுவடை செய்த நெல்லை வீட்டிற்கு கொண்டு செல்லமுடியாது குறித்த பகுதி விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்துள்ளார்கள். இந்நிலையில் இவ் வருடம் இறுதியாக நடந்த கரைதுறைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் குறித்த பாதையினை மதிப்பீடு செய்து 100மீற்றர் தூரம் தற்காலிக புனரமைப்பு செய்து தரும்படி கோரியிருந்தும் புனரமைப்பு செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் 4700 பை அறுவடை செய்த நெல்லும், 2700 ஏக்கர் பயிர்நிலமும் அழிவடைந்துள்ளது.இச்சம்பவம் குறித்து விவசாயி ஒருவர் கூறும் போது 2012 இல் இருந்து விவசாயம் செய்து வருகின்றோம்.அன்று தொடங்கி இன்றி வரை வீதி புனரமைப்பு செய்யப்படவில்லை. அந்நேரமும் நாம் விவசாயம் செய்து அறுவடை செய்த நெல்லை கடல்மார்க்கமாகவும் , பல வாகனங்கள் ஊடகவும் தான் சிறிது சிறிதாக கொண்டு போகின்றோம். ஆனால் இவ்வாறு செய்வதனால் விவசாயிகளுக்கு எந்த இலாபமும் கிடைப்பதில்லை.இதனால் கடந்த கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த பாதையில் 100மீற்றர் தூரம் தற்காலிக புணரமைப்பு செய்து தரும்படி கோரியிருந்நதாம் தற்காலிகமாக வீதியினை புணரமைத்து தந்தால் மட்டுமே நெல்லை கொண்டுவரலாம். அவ்வாறு செய்யாவிடில் அவ்வளவு நெல்லும் அழிவடையும் என கூறியிருந்தோம்.ஆனால் இதுவரை குறித்த பாதை புணரமைக்கப்படவில்லை. தற்போது அரச அதிகாரிகளின் அசண்டையீனத்தால் மழைவெள்ளம் ஒருபுறம் இருக்க அறுவடை செய்த நெல்லை வீட்டுக்கு கொண்டு செல்லமுடியாத நிலை இருக்கின்றது. அத்தோடு அறுவடை செய்த நெல்லினை யானை இரவு வேளைகளில் சாப்பிடுவதும், மழைநீரில் அடித்து செல்லப்படுவதும் என பல நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கின்றோம். அறுவடை செய்த நெல்லில் 100 பைகள் இதுவரை யானையால் கிழித்தெறியப்பட்டுள்ளது.இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் எவ்வளவு வறுமைக்குள்ளும் நெல் விதைத்து, மருந்து, உரங்கள் போட்டு, நோயிலிருந்து, யானையில் இருந்து பாதுகாத்து அறுவடை செய்து கடைசியாக சாப்பாட்டுக்கே நெல் இன்றி தவிக்கும் அவல நிலைக்கு வந்துள்ளோம். இவ்வாறான விபரிதம் ஏற்படும் என அன்று அரச அதிகாரிகளுக்கு கூறியிருந்தும் அரச அதிகாரிகளின் அசண்டையீனத்தினால் எல்லாவற்றையும் இழந்துள்ளோம்.4700 பை நெல் அறுவடை செய்து வயல் வெளிகளில் இருக்கின்றது. 2300 ஏக்கர் வயல் வெளிநிலங்கள், அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்து அழிவடைந்துள்ளது. அறுவடை செய்த நெல்லை நாம் கடத்த முடியாத நிலைதான் மற்றைய நிலங்கள் அழிவடைய காரணமாக இருந்துள்ளது. இவ்விடயங்களை நாம் தெரியப்படுத்தியும் அரச அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவில்லை. ஆகவே இவ் அழிவிற்கு சம்பந்தபட்ட அதிகாரிகளே பொறுப்பேற்று நஷ்ட ஈட்டினை அரசாங்கத்திடம் இருந்து பெற்று எமக்கு தரவேண்டும் .