• Nov 28 2024

நடுவானிலிருந்து உடனடியாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் : டெல்லியில் பரபரப்பு

Tharmini / Oct 14th 2024, 1:38 pm
image

மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியுயோர்க் நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததை அடுத்து விமானம் அதிகாலைவேளை அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. 239 பயணிகளுடன் ஏஐ 119 எனப்படும் ஏர் இந்தியா விமானம் நியுயோர்க் நோக்கி இன்று(14) புறப்பட்ட நிலையிலேயே நடுவானிலிருந்து அதிகாலை 4.10 மணியளவில் உடனடியாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். அத்துடன் விமான நிலையத்தில் தயாராக இருந்த வெடிகுண்டு நிபுணர்கள், விமானம் முழுவதும் சோதனை மேற்கொண்டபோதிலும் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருளும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை இதுதொடர்பாகப் பேசிய ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர், இந்த எதிர்பாராத இடையூறினால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்தைக் குறைக்கும் விதமாக எங்கள் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஏர் இந்தியா தனது பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதில் உறுதியுடன் உள்ளது" என்று தெரிவித்தார்.

நடுவானிலிருந்து உடனடியாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் : டெல்லியில் பரபரப்பு மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியுயோர்க் நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததை அடுத்து விமானம் அதிகாலைவேளை அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. 239 பயணிகளுடன் ஏஐ 119 எனப்படும் ஏர் இந்தியா விமானம் நியுயோர்க் நோக்கி இன்று(14) புறப்பட்ட நிலையிலேயே நடுவானிலிருந்து அதிகாலை 4.10 மணியளவில் உடனடியாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.வெடிகுண்டு நிபுணர்கள் சோதனைவிமானம் தரையிறக்கப்பட்ட நிலையில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். அத்துடன் விமான நிலையத்தில் தயாராக இருந்த வெடிகுண்டு நிபுணர்கள், விமானம் முழுவதும் சோதனை மேற்கொண்டபோதிலும் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருளும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை இதுதொடர்பாகப் பேசிய ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர், இந்த எதிர்பாராத இடையூறினால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்தைக் குறைக்கும் விதமாக எங்கள் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஏர் இந்தியா தனது பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதில் உறுதியுடன் உள்ளது" என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement