• Sep 29 2024

பிரித்தானியாவுக்குள் படகு மூலம் நுழைய முயன்ற அல்பேனிய குற்றவாளிகள்!

Tamil nila / Dec 23rd 2022, 3:14 pm
image

Advertisement

பிரித்தானியாவுக்குள் படகு மூலம் நுழைய முயன்ற 40க்கும் மேற்பட்ட அல்பேனிய குற்றவாளிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர், அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர்.


குற்றச் செயலில் ஈடுபடும் கும்பல் பிரித்தானியாவின் நவீன அடிமைச் சட்டங்களை அப்பட்டமாக கையாளுதல் செய்வதாக கடந்த மாதம் தேசிய குற்றவியல் நிறுவனம் எச்சரிக்கை செய்தது.


மேலும், அல்பேனிய கும்பல்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுத்த, சிறிய படகு மூலம் மக்களை கால்வாய் வழியாக கொண்டு வருவதாகவும் அந்நிறுவனம் கூறியது.


பிரித்தானியாவில் உள்ள அல்பேனியர்களில் கணிசமான பகுதியினர் சட்டவிரோதமாக இங்கு வந்திருக்க வாய்ப்புள்ளது என NCA துணை இயக்குனர் ஆண்ட்ரியா வில்சன்(Andrea Wilson) கூறினார்.


இந்த நிலையில், அல்பேனிய குற்றவாளிகள் 32 பேர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் பிரித்தானியாவுக்குள் படகு மூலம் நுழைய முயன்றுள்ளனர். நாடு கடத்தல் அவர்கள் அனைவரும் உள்துறை அலுவலக அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டனர்.


பின்னர் விமானம் மூலம் அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதேபோல் விசா காலாவதியான வெளிநாட்டவர்கள் அல்லது சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு வந்தவர்கள் என சிலர் விமான பயணத்தின்போது சிக்கினர்.


அவர்களில் மூவர் வடக்கு பிரான்சில் இருந்து சிறிய படகு மூலம் வந்தவர்கள் என வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்கள் பிரித்தானிய குடிவரவு அமலாக்க அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர் மற்றும் தரையிறங்கியதும் அல்பேனிய பொலிஸார் அவர்களை சந்தித்தனர்.


இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 13,000-க்கும் மேற்பட்ட அல்பேனியர்கள் சிறிய படகு மூலம் பிரித்தானியாவை அடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது 2020யில் வெறும் 50 ஆகவும், கடந்த ஆண்டு 800 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவுக்குள் படகு மூலம் நுழைய முயன்ற அல்பேனிய குற்றவாளிகள் பிரித்தானியாவுக்குள் படகு மூலம் நுழைய முயன்ற 40க்கும் மேற்பட்ட அல்பேனிய குற்றவாளிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர், அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர்.குற்றச் செயலில் ஈடுபடும் கும்பல் பிரித்தானியாவின் நவீன அடிமைச் சட்டங்களை அப்பட்டமாக கையாளுதல் செய்வதாக கடந்த மாதம் தேசிய குற்றவியல் நிறுவனம் எச்சரிக்கை செய்தது.மேலும், அல்பேனிய கும்பல்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுத்த, சிறிய படகு மூலம் மக்களை கால்வாய் வழியாக கொண்டு வருவதாகவும் அந்நிறுவனம் கூறியது.பிரித்தானியாவில் உள்ள அல்பேனியர்களில் கணிசமான பகுதியினர் சட்டவிரோதமாக இங்கு வந்திருக்க வாய்ப்புள்ளது என NCA துணை இயக்குனர் ஆண்ட்ரியா வில்சன்(Andrea Wilson) கூறினார்.இந்த நிலையில், அல்பேனிய குற்றவாளிகள் 32 பேர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் பிரித்தானியாவுக்குள் படகு மூலம் நுழைய முயன்றுள்ளனர். நாடு கடத்தல் அவர்கள் அனைவரும் உள்துறை அலுவலக அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டனர்.பின்னர் விமானம் மூலம் அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதேபோல் விசா காலாவதியான வெளிநாட்டவர்கள் அல்லது சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு வந்தவர்கள் என சிலர் விமான பயணத்தின்போது சிக்கினர்.அவர்களில் மூவர் வடக்கு பிரான்சில் இருந்து சிறிய படகு மூலம் வந்தவர்கள் என வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்கள் பிரித்தானிய குடிவரவு அமலாக்க அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர் மற்றும் தரையிறங்கியதும் அல்பேனிய பொலிஸார் அவர்களை சந்தித்தனர்.இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 13,000-க்கும் மேற்பட்ட அல்பேனியர்கள் சிறிய படகு மூலம் பிரித்தானியாவை அடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது 2020யில் வெறும் 50 ஆகவும், கடந்த ஆண்டு 800 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement