• Jun 26 2024

இலங்கையில் கேக் விலையை கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள்..!

Chithra / Dec 23rd 2022, 3:26 pm
image

Advertisement

பண்டிகை காலத்தில் நாட்டின் சாதாரண மக்கள் ருசிப்பதற்காக வெதுப்பாக உரிமையாளர்களுக்கு குறைந்த விலையில் கேக்கை தயாரித்து விற்பனை செய்ய முடியாமல் போயுள்ளதாகவும் ஒரு கிலோ பட்டர் கேக்கின் விலை 1,500 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும், அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


கேக் தயாரிப்புக்கு தேவையான பிரதான மூலப்பொருளான முட்டையின் விலை அதிகரித்துள்ளதுடன் முட்டைக்கு தட்டுப்பாடும் நிலவுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.


இதன் காரணமாக சாதாரண வெதுப்பாக உரிமையாளருக்கு கேக்கை தயாரிக்க முடியாமல் உள்ளது. முட்டை ஒன்று தற்போது 60 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன் தேவைப்படும் அளவுக்கு கொள்வனவு செய்ய முடியாமல் உள்ளது.


இந்த நிலைமையில் கேக் விற்பனை 75 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இப்படியான நிலைமையேற்படும் என நாங்கள் பல மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தோம். சாதாரணமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் முட்டை நுகர்வு இரண்டு மடங்காக அதிகரிக்கும்.


அதற்கு தீர்வு வழங்குமாறு கோரினோம். அது நடக்கவில்லை. எது எப்படி இருந்த போதிலும் கோதுமை மா தேவையான அளவுக்கு சந்தையில் இருப்பதாகவும் என்.கே.ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் கேக் விலையை கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள். பண்டிகை காலத்தில் நாட்டின் சாதாரண மக்கள் ருசிப்பதற்காக வெதுப்பாக உரிமையாளர்களுக்கு குறைந்த விலையில் கேக்கை தயாரித்து விற்பனை செய்ய முடியாமல் போயுள்ளதாகவும் ஒரு கிலோ பட்டர் கேக்கின் விலை 1,500 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும், அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.கேக் தயாரிப்புக்கு தேவையான பிரதான மூலப்பொருளான முட்டையின் விலை அதிகரித்துள்ளதுடன் முட்டைக்கு தட்டுப்பாடும் நிலவுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.இதன் காரணமாக சாதாரண வெதுப்பாக உரிமையாளருக்கு கேக்கை தயாரிக்க முடியாமல் உள்ளது. முட்டை ஒன்று தற்போது 60 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன் தேவைப்படும் அளவுக்கு கொள்வனவு செய்ய முடியாமல் உள்ளது.இந்த நிலைமையில் கேக் விற்பனை 75 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இப்படியான நிலைமையேற்படும் என நாங்கள் பல மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தோம். சாதாரணமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் முட்டை நுகர்வு இரண்டு மடங்காக அதிகரிக்கும்.அதற்கு தீர்வு வழங்குமாறு கோரினோம். அது நடக்கவில்லை. எது எப்படி இருந்த போதிலும் கோதுமை மா தேவையான அளவுக்கு சந்தையில் இருப்பதாகவும் என்.கே.ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement