• Nov 28 2024

சகல தொடருந்து சேவைகளும் இரத்து! வெளியான அறிவிப்பு

Chithra / Jun 2nd 2024, 4:47 pm
image

 

களனிவெளி தொடருந்து மார்க்கத்தில் அவிசாவளை முதல் கொழும்பு வரை இடம்பெறும், சகல தொடருந்து  சேவைகளும் இன்று (02) இரத்துச் செய்யப்பட்டுள்ளன. 

கொஸ்கம மற்றும் வக ஆகிய பகுதிகளுக்கு இடையில் உள்ள பாலமொன்று சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த தொடருந்து மார்க்கத்தில் மொத்தமாக 3 தொடருந்துச் சேவைகள் இன்றைய தினம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, தொடருந்துத் திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார். 

இதேவேளை, தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன வெளியேறும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால், குறித்த வீதியூடான போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து பயணிக்கும் வாகனங்கள், தொடங்கொட வெளியேறும் பகுதி வரை மாத்திரமே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை மலையக பகுதிகளில் கடும் பனிமூட்டமான வானிலை நிலவுவதனால், வீதிகளில் சாரதிகள் பயணிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சகல தொடருந்து சேவைகளும் இரத்து வெளியான அறிவிப்பு  களனிவெளி தொடருந்து மார்க்கத்தில் அவிசாவளை முதல் கொழும்பு வரை இடம்பெறும், சகல தொடருந்து  சேவைகளும் இன்று (02) இரத்துச் செய்யப்பட்டுள்ளன. கொஸ்கம மற்றும் வக ஆகிய பகுதிகளுக்கு இடையில் உள்ள பாலமொன்று சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தொடருந்து மார்க்கத்தில் மொத்தமாக 3 தொடருந்துச் சேவைகள் இன்றைய தினம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, தொடருந்துத் திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார். இதேவேளை, தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன வெளியேறும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால், குறித்த வீதியூடான போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக கொழும்பில் இருந்து பயணிக்கும் வாகனங்கள், தொடங்கொட வெளியேறும் பகுதி வரை மாத்திரமே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மலையக பகுதிகளில் கடும் பனிமூட்டமான வானிலை நிலவுவதனால், வீதிகளில் சாரதிகள் பயணிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement