• Dec 31 2024

கோட்டா ஆட்சியில் எழுந்த குற்றச்சாட்டுக்கள்: உண்மையை வெளிக்கொணர வேண்டும்! அநுரவிடம் சாணக்கியன் கோரிக்கை

Chithra / Dec 26th 2024, 10:01 am
image

  

கோட்டாபய அரசாங்கத்தின் காலப்பகுதியில் சட்டத்துறை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையினை விசாரணை செய்து தற்போதைய அரசாங்கம் வெளிக்கொணர வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று மாலை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டி அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்கு அருகிலிருந்து நிகழ்வு நடைபெறும் இடம்வரையிலும் இந்த நீதிகோரிய கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து, கருத்து தெரிவித்த சாணக்கியன், 

"கடந்த கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஜோசப் ஐயாவின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் என்ற எந்த நம்பிக்கையினையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை. ஜோசப்பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்த பிள்ளையான், கோட்டாபய ராஜபக்சவின் காலப்பகுதியில் விடுதலை செய்யப்பட்டார்.

பிள்ளையானுடன் இருந்த அசாத் மௌலானா என்பவர் சுவிஸ் அல்லது பிரான்ஸ் சென்று அங்கிருந்து பல்வேறு உண்மைகளை சொல்லியிருந்தார். அது தொடர்பாக சர்வதேச தொலைக்காட்சியொன்று தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில் பிள்ளையானை விடுதலை செய்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களம் எவ்வாறு சிலரை இடமாற்றினார்கள் என்று அந்த காணொளியில் சொல்லப்பட்டது. அன்று நீதி அமைச்சராகயிருந்த அலிசப்ரியின் வழிகாட்டலில் தான் இது நடைபெற்றது என்று சொல்லப்பட்டது.

பிள்ளையானை விடுதலை செய்ததன் காரணமாக கோட்டாபய ஆட்சியில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்பவில்லை. 

ஆனால், இந்த ஆட்சியில் கடந்த காலத்தில் நடந்த பல விடயங்கள் தொடர்பில் செயற்படுவோம் எனவும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் உட்பட சில படுகொலைகளை ஆராய்வதாகவும் அந்த விசாரணைபட்டியலில் ஜோசப்பரராஜசிங்கத்தின் பெயர் உள்வாங்கப்படவில்லை.

இந்நிலையில், இலங்கையின் சட்டத்துறைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையினை தற்போதுள்ள அரசாங்கம் வெளிக்கொணர வேண்டும். அசாத் மௌலானா சொன்ன விடயங்களை வைத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

மேலும், குற்றப்புலனாய்வு துறையானது பிள்ளையானை விடுதலை செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து மீண்டும் ஒரு விசாரணையை முன்னெடுக்க வேண்டும். ஜோசப்பரராஜசிங்கம் கொலை தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்து அதனுடன் தொடர்புபட்டவர்கள் இன்னும் உள்ளார்கள்.

அவர்களை மீண்டும் விசாரணை செய்து ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு மாத்திரமல்லாமல் வடகிழக்கில் நடந்த அனைத்து படுகொலைகளுக்கும் நீதியை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் செயற்படவேண்டும் என கோரியுள்ளார். 


கோட்டா ஆட்சியில் எழுந்த குற்றச்சாட்டுக்கள்: உண்மையை வெளிக்கொணர வேண்டும் அநுரவிடம் சாணக்கியன் கோரிக்கை   கோட்டாபய அரசாங்கத்தின் காலப்பகுதியில் சட்டத்துறை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையினை விசாரணை செய்து தற்போதைய அரசாங்கம் வெளிக்கொணர வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று மாலை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.இதன்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டி அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்கு அருகிலிருந்து நிகழ்வு நடைபெறும் இடம்வரையிலும் இந்த நீதிகோரிய கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றுள்ளது.அதனை தொடர்ந்து, கருத்து தெரிவித்த சாணக்கியன், "கடந்த கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஜோசப் ஐயாவின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் என்ற எந்த நம்பிக்கையினையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை. ஜோசப்பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்த பிள்ளையான், கோட்டாபய ராஜபக்சவின் காலப்பகுதியில் விடுதலை செய்யப்பட்டார்.பிள்ளையானுடன் இருந்த அசாத் மௌலானா என்பவர் சுவிஸ் அல்லது பிரான்ஸ் சென்று அங்கிருந்து பல்வேறு உண்மைகளை சொல்லியிருந்தார். அது தொடர்பாக சர்வதேச தொலைக்காட்சியொன்று தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.அதில் பிள்ளையானை விடுதலை செய்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களம் எவ்வாறு சிலரை இடமாற்றினார்கள் என்று அந்த காணொளியில் சொல்லப்பட்டது. அன்று நீதி அமைச்சராகயிருந்த அலிசப்ரியின் வழிகாட்டலில் தான் இது நடைபெற்றது என்று சொல்லப்பட்டது.பிள்ளையானை விடுதலை செய்ததன் காரணமாக கோட்டாபய ஆட்சியில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்பவில்லை. ஆனால், இந்த ஆட்சியில் கடந்த காலத்தில் நடந்த பல விடயங்கள் தொடர்பில் செயற்படுவோம் எனவும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் உட்பட சில படுகொலைகளை ஆராய்வதாகவும் அந்த விசாரணைபட்டியலில் ஜோசப்பரராஜசிங்கத்தின் பெயர் உள்வாங்கப்படவில்லை.இந்நிலையில், இலங்கையின் சட்டத்துறைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையினை தற்போதுள்ள அரசாங்கம் வெளிக்கொணர வேண்டும். அசாத் மௌலானா சொன்ன விடயங்களை வைத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.மேலும், குற்றப்புலனாய்வு துறையானது பிள்ளையானை விடுதலை செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து மீண்டும் ஒரு விசாரணையை முன்னெடுக்க வேண்டும். ஜோசப்பரராஜசிங்கம் கொலை தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்து அதனுடன் தொடர்புபட்டவர்கள் இன்னும் உள்ளார்கள்.அவர்களை மீண்டும் விசாரணை செய்து ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு மாத்திரமல்லாமல் வடகிழக்கில் நடந்த அனைத்து படுகொலைகளுக்கும் நீதியை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் செயற்படவேண்டும் என கோரியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement