அதிகமாக மக்களின் பாவனைக்குட்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த மோசடிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இலங்கை பொலிஸ் பிரிவு மக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, தனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்யும் நபர்களால் நிதி மோசடிகள் இடம்பெற்று வருகின்றது என பொலிஸ்பிரிவு பொதுமக்களை எச்சரித்துள்ளது.
அவ்வாறு மோசடி செய்யப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை மீட்டெடுக்க support@whatsapp.com என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் என்று பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் https://telligp.police.lk என்ற இணையவழியாக பொலிஸ் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் மோசடிகள் குறித்து பொலிஸாரின் அறிவிப்பு அதிகமாக மக்களின் பாவனைக்குட்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருகின்றன. அந்த மோசடிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இலங்கை பொலிஸ் பிரிவு மக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, தனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்யும் நபர்களால் நிதி மோசடிகள் இடம்பெற்று வருகின்றது என பொலிஸ்பிரிவு பொதுமக்களை எச்சரித்துள்ளது.அவ்வாறு மோசடி செய்யப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை மீட்டெடுக்க support@whatsapp.com என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் என்று பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது. மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் https://telligp.police.lk என்ற இணையவழியாக பொலிஸ் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.