• May 03 2024

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு...! கல்வி அமைச்சர் உறுதி...!samugammedia

Sharmi / Oct 27th 2023, 3:27 pm
image

Advertisement

யார் பிரச்சினையை ஏற்படுத்தினாலும் பொறுப்புக்களை ஏற்றவர்கள் என்ற வகையில் சரியான தீர்வுகளை வழங்க பாடுபடுவேன் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பல சவால்கள் இருந்த வேளையில் தான் கல்விக்கு பொறுப்பான அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

மேலும் அந்த சவால்களுக்கு படிப்படியாக தீர்வுகளை வழங்குவதன் மூலம் முன்னேறுவது அவரது நம்பிக்கை. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஆசிரியர் அதிபர்களின் போராட்டம் ஒடுக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய வினாக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்,

'ஆசிரியர் சங்கங்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி இதுவரையில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளேன். வரவு செலவுத் திட்ட ஆவணம் வெளிவரவுள்ள நிலையில், ஆசிரியர்கள், அதிபர்கள் மட்டுமன்றி ஏனைய சேவைகளுக்கான சம்பள முரண்பாடுகளை களைய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து சில ஒதுக்கீடுகளை ஒதுக்கித் தருமாறு பரிந்துரைத்துள்ளோம்,

அதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால் கருவூலம் நாட்டின் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறது என்றார்.

தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்கள் சார்பில் கோரிக்கை வைப்பது சகஜம் என்றும், கல்வி மாநாட்டிற்காக வெளிநாட்டில் இருந்தபோது ஏற்பட்ட சூழ்நிலையால் எந்த தரப்பினருக்கும் முன்விரோதம் அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் அதுபற்றி தேவையில்லாமல் கவலைப்பட்டு பயனில்லை என்றார்.

எதிர்வரும் வாரத்தில் தொழிற்சங்க குழுக்களை சந்திக்கவுள்ளதாக தனது கவலையை தெரிவிக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இங்கு, பரீட்சை வினாத்தாள்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,

பரீட்சை திணைக்களம் தராதரத்திற்கு அமைவாக வினாத்தாள்களை தயாரிக்கிறது என்றும், அதன் பின்னர் தரம் பேணப்பட்டு வருவதாகவும், அவ்வாறு விமர்சனங்களை முன்வைப்பவர்களே இவ்வாறு விமர்சிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு. கல்வி அமைச்சர் உறுதி.samugammedia யார் பிரச்சினையை ஏற்படுத்தினாலும் பொறுப்புக்களை ஏற்றவர்கள் என்ற வகையில் சரியான தீர்வுகளை வழங்க பாடுபடுவேன் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.பல சவால்கள் இருந்த வேளையில் தான் கல்விக்கு பொறுப்பான அமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும் அந்த சவால்களுக்கு படிப்படியாக தீர்வுகளை வழங்குவதன் மூலம் முன்னேறுவது அவரது நம்பிக்கை. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். ஆசிரியர் அதிபர்களின் போராட்டம் ஒடுக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய வினாக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், 'ஆசிரியர் சங்கங்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி இதுவரையில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளேன். வரவு செலவுத் திட்ட ஆவணம் வெளிவரவுள்ள நிலையில், ஆசிரியர்கள், அதிபர்கள் மட்டுமன்றி ஏனைய சேவைகளுக்கான சம்பள முரண்பாடுகளை களைய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து சில ஒதுக்கீடுகளை ஒதுக்கித் தருமாறு பரிந்துரைத்துள்ளோம், அதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால் கருவூலம் நாட்டின் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறது என்றார். தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்கள் சார்பில் கோரிக்கை வைப்பது சகஜம் என்றும், கல்வி மாநாட்டிற்காக வெளிநாட்டில் இருந்தபோது ஏற்பட்ட சூழ்நிலையால் எந்த தரப்பினருக்கும் முன்விரோதம் அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் அதுபற்றி தேவையில்லாமல் கவலைப்பட்டு பயனில்லை என்றார். எதிர்வரும் வாரத்தில் தொழிற்சங்க குழுக்களை சந்திக்கவுள்ளதாக தனது கவலையை தெரிவிக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். இங்கு, பரீட்சை வினாத்தாள்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,பரீட்சை திணைக்களம் தராதரத்திற்கு அமைவாக வினாத்தாள்களை தயாரிக்கிறது என்றும், அதன் பின்னர் தரம் பேணப்பட்டு வருவதாகவும், அவ்வாறு விமர்சனங்களை முன்வைப்பவர்களே இவ்வாறு விமர்சிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement