• May 11 2024

அமரர் சந்திரகாந்தன் ஞாபகார்த்த மழலைகள் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி...! மயிலங்காடு ஞானமுருகன் சம்பியன்...!samugammedia

Sharmi / Oct 31st 2023, 5:19 pm
image

Advertisement

அமரர் ச.சந்திரகாந்தனின் நண்பர்களின் நிதி அனுசரணையில் தெல்லிப்பழை கிறாஸ்கொப்பர்ஸ் கிட்ஸ் அக்கடமியால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது 
இன்று (31) காலை 8.00 மணியளவில் மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

இச் சுற்றுப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அமரர் சந்திரகாந்தனின் நண்பனான சட்டத்தரணி ப.ஐங்கரனும் , சிறப்பு விருந்தினராக தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் பிரதி அதிபர் வே.சந்திரசேகர் மற்றும் அமரர் சந்திரகாந்தனின் பயிற்றுவிப்பாளர் கு.பிரபாகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

வட மாகாணத்தில்  8 வயதிற்குட்பட்டவர்களுக்கு நடாத்தப்பட்ட முதற் சுற்றுப்போட்டியான இப்போட்டியில் தெல்லிப்பழை கிறாஸ்கொப்பர்ஸ் கிட்ஸ் அக்கடமி , மயிலங்காடு ஞானமுருகன் அக்கடமி ,கோண்டாவில்  றொனால்டோ அக்கடமி  , அரியாலை யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட  அக்கடமி , மருதனார்மடம் நொதேர்ண் ஸ்போட்ஸ் கொலிச் மற்றும் வேலணை ஐயானார் அக்கடமி ஆகிய 6 அணிகள் பங்கெடுத்திருந்தன.

இறுதிப் போட்டியில் மருதனார்மடம் நொதேர்ண் ஸ்போட்ஸ் கொலிச் அணியை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் அக்கடமி அணி விளையாடியது.

இதில் மயிலங்காடு ஞானமுருகன் அணி  4 : 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
          
இதேவேளை மூன்றாமிடத்திற்கான போட்டியில்  தெல்லிப்பழை கிறாஸ்கொப்பர்ஸ் கிட்ஸ் அக்கடமி அணியை எதிர்த்து கோண்டாவில் றொனால்டோ அக்கடமி அணி விளையாடியது. இதில் கோண்டாவில் றொனால்ட்டோ அக்கடமி அணி 2 : 0  என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.



அமரர் சந்திரகாந்தன் ஞாபகார்த்த மழலைகள் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி. மயிலங்காடு ஞானமுருகன் சம்பியன்.samugammedia அமரர் ச.சந்திரகாந்தனின் நண்பர்களின் நிதி அனுசரணையில் தெல்லிப்பழை கிறாஸ்கொப்பர்ஸ் கிட்ஸ் அக்கடமியால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது இன்று (31) காலை 8.00 மணியளவில் மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்றது.இச் சுற்றுப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அமரர் சந்திரகாந்தனின் நண்பனான சட்டத்தரணி ப.ஐங்கரனும் , சிறப்பு விருந்தினராக தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் பிரதி அதிபர் வே.சந்திரசேகர் மற்றும் அமரர் சந்திரகாந்தனின் பயிற்றுவிப்பாளர் கு.பிரபாகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.வட மாகாணத்தில்  8 வயதிற்குட்பட்டவர்களுக்கு நடாத்தப்பட்ட முதற் சுற்றுப்போட்டியான இப்போட்டியில் தெல்லிப்பழை கிறாஸ்கொப்பர்ஸ் கிட்ஸ் அக்கடமி , மயிலங்காடு ஞானமுருகன் அக்கடமி ,கோண்டாவில்  றொனால்டோ அக்கடமி  , அரியாலை யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட  அக்கடமி , மருதனார்மடம் நொதேர்ண் ஸ்போட்ஸ் கொலிச் மற்றும் வேலணை ஐயானார் அக்கடமி ஆகிய 6 அணிகள் பங்கெடுத்திருந்தன.இறுதிப் போட்டியில் மருதனார்மடம் நொதேர்ண் ஸ்போட்ஸ் கொலிச் அணியை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் அக்கடமி அணி விளையாடியது. இதில் மயிலங்காடு ஞானமுருகன் அணி  4 : 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.          இதேவேளை மூன்றாமிடத்திற்கான போட்டியில்  தெல்லிப்பழை கிறாஸ்கொப்பர்ஸ் கிட்ஸ் அக்கடமி அணியை எதிர்த்து கோண்டாவில் றொனால்டோ அக்கடமி அணி விளையாடியது. இதில் கோண்டாவில் றொனால்ட்டோ அக்கடமி அணி 2 : 0  என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

Advertisement

Advertisement

Advertisement