• Apr 28 2024

பெரிய வெங்காயத்தால் சிக்கல்...! மடக்கி பிடிக்கப்பட்ட நபருக்கு ஏற்பட்ட நிலை...!samugammedia

Sharmi / Oct 31st 2023, 5:09 pm
image

Advertisement

மனித பாவனைக்கு உதவாத பெரிய வெங்காயத்தை கொண்டு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டைமுனை பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு கனரக லொறிமூலம் கொண்டுசெல்லப்பட்ட பெரிய வெங்காயமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனையின் பேரில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில் குறித்த கனரக லொறி கடந்த வியாழக்கிழமை (26) மடக்கிப் பிடிக்கப்பட்டு லொறியிலிருந்து மனித பாவனைக்குதவாத 40 மூடைகளைக் கொண்ட 960 கிலோ கிராம் பெரிய வெங்காயம் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஆறுமாத கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

பெரிய வெங்காயத்தால் சிக்கல். மடக்கி பிடிக்கப்பட்ட நபருக்கு ஏற்பட்ட நிலை.samugammedia மனித பாவனைக்கு உதவாத பெரிய வெங்காயத்தை கொண்டு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டைமுனை பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு கனரக லொறிமூலம் கொண்டுசெல்லப்பட்ட பெரிய வெங்காயமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனையின் பேரில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில் குறித்த கனரக லொறி கடந்த வியாழக்கிழமை (26) மடக்கிப் பிடிக்கப்பட்டு லொறியிலிருந்து மனித பாவனைக்குதவாத 40 மூடைகளைக் கொண்ட 960 கிலோ கிராம் பெரிய வெங்காயம் மீட்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சந்தேக நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஆறுமாத கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement