• Jun 27 2024

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சட்டத்தில் திருத்தங்கள்!

Chithra / Feb 7th 2023, 12:17 pm
image

Advertisement

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு அறிவுறுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தனியார் துறை ஊழியர்களுக்கு அக்ரஹார சுகாதார காப்புறுதிக்கு நிகரான சுகாதார காப்புறுதியை வழங்குவதற்கான பிரேரணை 2023 வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

முன்மொழிவை நடைமுறைப்படுத்த 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியம்.

எனவே, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ஊக்குவித்த பிரேரணைக்கு அமைச்சர்கள் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சட்டத்தில் திருத்தங்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு அறிவுறுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.தனியார் துறை ஊழியர்களுக்கு அக்ரஹார சுகாதார காப்புறுதிக்கு நிகரான சுகாதார காப்புறுதியை வழங்குவதற்கான பிரேரணை 2023 வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.முன்மொழிவை நடைமுறைப்படுத்த 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியம்.எனவே, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ஊக்குவித்த பிரேரணைக்கு அமைச்சர்கள் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement