அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் கைதான நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோரை விளக்கமறியல் வைக்குமாறுசம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி அதில் பயணித்த மாணவர்கள் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ்பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நிந்தவூர் மதரசா அதிபர் ,ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவரும் நேற்றையதினம் (28) கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சந்தேகநபர்களை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்ற பின்னர் சம்மாந்துறை நீதிமன்ற பதில் எம்.ரி சபீர் அகமட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோருக்கு எதிர்வரும் டிசம்பர் 2 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய 2 உதவியாளர்களும் தலா 1 இலட்சம் ரூபா வீதம் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி மதரசா முடிந்ததும் குறித்த மாணவர்களுக்கு வீட்டுக்குச் செல்ல பேருந்து இல்லாத காரணத்தினால் குறித்த மாணவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதுடன் நிர்வாகம் மெத்தனப் போக்குடன் இவ்விடயத்தில் நடந்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் மாணவர்கள் பயணம் செய்த குறித்த வீதி ஆபத்தானது என்பதால் உழவு இயந்திரத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டாம் என இராணுவத்தினர் அறிவுறுத்தியிருந்தமை மேலும் தெரியவந்துள்ளது.
அம்பாறை உழவு இயந்திர விபத்து; மத்ரஸா அதிபர், ஆசிரியருக்கு விளக்கமறியல். அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் கைதான நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோரை விளக்கமறியல் வைக்குமாறுசம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி அதில் பயணித்த மாணவர்கள் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நிந்தவூர் மதரசா அதிபர் ,ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவரும் நேற்றையதினம் (28) கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், சந்தேகநபர்களை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்ற பின்னர் சம்மாந்துறை நீதிமன்ற பதில் எம்.ரி சபீர் அகமட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இதன்போது மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோருக்கு எதிர்வரும் டிசம்பர் 2 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய 2 உதவியாளர்களும் தலா 1 இலட்சம் ரூபா வீதம் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.கடந்த செவ்வாய்க்கிழமை நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி மதரசா முடிந்ததும் குறித்த மாணவர்களுக்கு வீட்டுக்குச் செல்ல பேருந்து இல்லாத காரணத்தினால் குறித்த மாணவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதுடன் நிர்வாகம் மெத்தனப் போக்குடன் இவ்விடயத்தில் நடந்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மேலும் மாணவர்கள் பயணம் செய்த குறித்த வீதி ஆபத்தானது என்பதால் உழவு இயந்திரத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டாம் என இராணுவத்தினர் அறிவுறுத்தியிருந்தமை மேலும் தெரியவந்துள்ளது.