• May 24 2025

சீனாவில் இடிந்து விழுந்த பழமை வாய்ந்த கோபுரம்..!

Sharmi / May 23rd 2025, 11:41 am
image

சீனாவில் 650 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோபுரம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.

சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று பெங்யாங் கோபுரம் ஆகும்.

650 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோபுரத்தைக் காண தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

ஏராளமானோர் அங்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் திடீரென அதன் மேற்கூரை சரிய தொடங்கியது. இதனை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

சற்று நேரத்தில் அந்த கோபுரத்தின் மேற்கூரை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. அதிர்ஷ்டவசமாக சுற்றுலா பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


சீனாவில் இடிந்து விழுந்த பழமை வாய்ந்த கோபுரம். சீனாவில் 650 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோபுரம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று பெங்யாங் கோபுரம் ஆகும்.650 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோபுரத்தைக் காண தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.ஏராளமானோர் அங்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் திடீரென அதன் மேற்கூரை சரிய தொடங்கியது. இதனை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.சற்று நேரத்தில் அந்த கோபுரத்தின் மேற்கூரை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. அதிர்ஷ்டவசமாக சுற்றுலா பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement