• May 21 2024

யாழில் ஆயிரக்கணக்கான மக்களின் பாராட்டை பெற்ற கலைவிழா!

Chithra / Jan 25th 2023, 12:05 pm
image

Advertisement

குருநகர் புனித யாகப்பர் ஆலய யோசவ்வாஸ் இளையோர் மன்றத்தின் 30வது ஆண்டடை முன்னிட்டு நடாத்திய கலைவிழா நேற்றையதினம் மாலை 5.30மணியளவில் குருநகர் கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

குருநகர் யோசவ்வாஸ் இளையோர் மன்ற தலைவர் விக்ரர்குமார் சுரேன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மனித முன்னேற்ற நடு நிலைய இயக்குநர் அருட்பணி இயூஜின் பிரான்சிஸ் அடிகளாரும், கௌரவ விருந்தினர்களாக யாழ் மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநரும்

புனித யாகப்பர் ஆலய  பங்குத்தந்தையுமான அருட்பணி அருளானந்தம் யாவிஸ் அடிகளாரும் குருநகர் பங்கின் உதவிப்பங்குத்தந்தை அருட்பணி தயதீபன் அடிகளாரும் கலந்து சிறப்பித்தனர். 

சிறப்பு விருந்தினர்களாக பாண்டியந்தாழ்வு புனித அன்னம்மாள் ஆலய பங்குத்தந்தையும் குருநகர் பங்கின் முந்நாள் பங்குத்தந்தையுமான அருட்பணி R.C.X. நேசராஜா அடிகளாரும், புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியரும் குருநகர் யோசவ்வாஸ் இளையோர் மன்ற மகிமை அங்கத்தவருமான யேசுதாசன் இக்னேசியஸ் பிரபா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இக்கலைவிழாவில் குருநகரின் ஆரம்ப தொழிலாகிய கரைவலை தொழில் தற்போது பயில் நிலையில் இல்லாத போதிலும் அத்தொழிலில் பாடப்படுகின்ற அம்பா பாடல்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்து காட்டும் நிகழ்வாக  அம்பா பாடல்கள் நிகழ்வும், சமுகத்தின்  மத்தியிலே விவாத நிகழ்வுகள்  அரிகி வரும் நிலையில்   சமுகத்திற்கு எடுத்து காட்டும் நிகழ்வாக பிள்ளைகளின் வளர்ச்சியில் அதிகம் பங்காற்றுவது பெற்றோரா சமுகமா எனும் தொனிப்பொருளில் பட்டிமன்றமும், குருநகர் வரலாற்றிலேயே முதல் முறையாக வடமோடிக்கூத்து வீரன் தாவீதன்  இளையோரால்  மேடை ஏற்றப்பட்டது. 

சிறப்பு நிகழ்வாக இலங்கை கூடைப்பந்தாட்ட அணி ஆசிய கிண்ணத்தை சுவைக்க பெரிதும் பங்காற்றிய குருநகர் மண்ணின் வீராங்கனை எப்சிபா அவர்களுக்கான கௌரவம் மற்றும் விருதும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு 2020, 2021ம் ஆண்டுகளில் பல்கலைக்கழகத்திற்கு தேர்வானோருக்கான கௌரவம் மற்றும் போதை விழிப்புனர்வு கரோல் நிகழ்வில் பங்கு பற்றியோருக்கான கௌரவிப்பும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பல்கலைகழக விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மமிமகிமை அங்கத்தவர்கள் நலன் விரும்பிகள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர். அத்தோடு அனைத்து மக்களாலும் இக்கலைவிழா பாராட்டப்பட்டது குறிப்பிடதக்கது.


யாழில் ஆயிரக்கணக்கான மக்களின் பாராட்டை பெற்ற கலைவிழா குருநகர் புனித யாகப்பர் ஆலய யோசவ்வாஸ் இளையோர் மன்றத்தின் 30வது ஆண்டடை முன்னிட்டு நடாத்திய கலைவிழா நேற்றையதினம் மாலை 5.30மணியளவில் குருநகர் கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.குருநகர் யோசவ்வாஸ் இளையோர் மன்ற தலைவர் விக்ரர்குமார் சுரேன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மனித முன்னேற்ற நடு நிலைய இயக்குநர் அருட்பணி இயூஜின் பிரான்சிஸ் அடிகளாரும், கௌரவ விருந்தினர்களாக யாழ் மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநரும்புனித யாகப்பர் ஆலய  பங்குத்தந்தையுமான அருட்பணி அருளானந்தம் யாவிஸ் அடிகளாரும் குருநகர் பங்கின் உதவிப்பங்குத்தந்தை அருட்பணி தயதீபன் அடிகளாரும் கலந்து சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினர்களாக பாண்டியந்தாழ்வு புனித அன்னம்மாள் ஆலய பங்குத்தந்தையும் குருநகர் பங்கின் முந்நாள் பங்குத்தந்தையுமான அருட்பணி R.C.X. நேசராஜா அடிகளாரும், புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியரும் குருநகர் யோசவ்வாஸ் இளையோர் மன்ற மகிமை அங்கத்தவருமான யேசுதாசன் இக்னேசியஸ் பிரபா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.இக்கலைவிழாவில் குருநகரின் ஆரம்ப தொழிலாகிய கரைவலை தொழில் தற்போது பயில் நிலையில் இல்லாத போதிலும் அத்தொழிலில் பாடப்படுகின்ற அம்பா பாடல்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்து காட்டும் நிகழ்வாக  அம்பா பாடல்கள் நிகழ்வும், சமுகத்தின்  மத்தியிலே விவாத நிகழ்வுகள்  அரிகி வரும் நிலையில்   சமுகத்திற்கு எடுத்து காட்டும் நிகழ்வாக பிள்ளைகளின் வளர்ச்சியில் அதிகம் பங்காற்றுவது பெற்றோரா சமுகமா எனும் தொனிப்பொருளில் பட்டிமன்றமும், குருநகர் வரலாற்றிலேயே முதல் முறையாக வடமோடிக்கூத்து வீரன் தாவீதன்  இளையோரால்  மேடை ஏற்றப்பட்டது. சிறப்பு நிகழ்வாக இலங்கை கூடைப்பந்தாட்ட அணி ஆசிய கிண்ணத்தை சுவைக்க பெரிதும் பங்காற்றிய குருநகர் மண்ணின் வீராங்கனை எப்சிபா அவர்களுக்கான கௌரவம் மற்றும் விருதும் வழங்கி வைக்கப்பட்டது.அத்தோடு 2020, 2021ம் ஆண்டுகளில் பல்கலைக்கழகத்திற்கு தேர்வானோருக்கான கௌரவம் மற்றும் போதை விழிப்புனர்வு கரோல் நிகழ்வில் பங்கு பற்றியோருக்கான கௌரவிப்பும் நடைபெற்றது.இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பல்கலைகழக விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மமிமகிமை அங்கத்தவர்கள் நலன் விரும்பிகள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர். அத்தோடு அனைத்து மக்களாலும் இக்கலைவிழா பாராட்டப்பட்டது குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement

Advertisement