• Nov 22 2024

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முயற்சி...! நாமல் எதிர்ப்பு...!

Sharmi / Feb 20th 2024, 9:58 am
image

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முயற்சி எடுக்கப்படுமானால் அது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. அந்த முயற்சி வெற்றி யும் அளிக்காது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும்,தேர்தல் முறைமையும் பின்னிப்பிணைந்துள்ளன. இவை இரண்டும் மாற்றப்படுமானால் அது பற்றிப் பரிசீலிக்கலாம். 

ஆனால் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் இதற்கான ஏற்பாடு இடம்பெறுமானால் அது நீதியான நடவடிக்கை அல்ல. 

அந்த நடவடிக்கை வெற்றியும் அளிக்காது. தற்போதைய சூழ்நிலையில் மக்களுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை மூடிமறைப்பதற்குகூட நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை பற்றிப் பேசப்படலாம். 

மக்களின் பிரச்சினைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முயற்சி. நாமல் எதிர்ப்பு. ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முயற்சி எடுக்கப்படுமானால் அது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. அந்த முயற்சி வெற்றி யும் அளிக்காது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும்,தேர்தல் முறைமையும் பின்னிப்பிணைந்துள்ளன. இவை இரண்டும் மாற்றப்படுமானால் அது பற்றிப் பரிசீலிக்கலாம். ஆனால் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் இதற்கான ஏற்பாடு இடம்பெறுமானால் அது நீதியான நடவடிக்கை அல்ல. அந்த நடவடிக்கை வெற்றியும் அளிக்காது. தற்போதைய சூழ்நிலையில் மக்களுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை மூடிமறைப்பதற்குகூட நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை பற்றிப் பேசப்படலாம். மக்களின் பிரச்சினைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement