• Dec 14 2024

தினமும் சராசரியாக 140 பெண்கள் உறவினர், காதலரால் கொல்லப்பட்டனர்- ஐ .நா மாதர் அமைப்பு

Tharmini / Nov 25th 2024, 4:29 pm
image

கடந்த ஆண்டு, தினமும் சராசரியாக 140 பெண்களும் சிறுமியரும் காதலர் அல்லது உறவினரால் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் (ஐநா) இரு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அந்த வகையில் பெண்கள் வீட்டில் உயிரிழக்கக்கூடிய வாய்ப்புதான் அதிகம் உள்ளதாக, இன்று (25) தெரிவிக்கப்பட்டது.

உலகளவில் 2023ஆம் ஆண்டில் சுமார் 51,100 பெண்கள், சிறுமியர் காதலர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டனர். 

அந்த எண்ணிக்கை, 2022ஆம் ஆண்டு பதிவான 48,800ஐவிட அதிகம் என்று ஐநா மாதர் அமைப்பு (U.N. Women), ஐநா போதைப்பொருள், குற்ற அலுவலகம் ஆகிய அமைப்புகள் குறிப்பிட்டன.

பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைக்கு எதிரான அனைத்துலக தினமான இன்று (25) இப்புள்ளிவிவரங்களைக் கொண்ட அறிக்கை வெளியிடப்பட்டது.

இதன் தொடர்பில் பல நாடுளிடமிருந்து கூடுதல் புள்ளிவிவரங்கள் கிடைப்பதுதான் எண்ணிக்கை அதிகரித்தற்குக் காரணம் என்றும் கூடுதல் பெண்கள் கொல்லப்பட்டது காரணம் அல்ல என்றும் அறிக்கை சுட்டியது.

அதேவேளை, எல்லா இடங்களிலும் பெண்கள், சிறுமியர் தொடர்ந்து பாலினம் சார்ந்த வன்முறைக்கு ஆளாகின்றனர் என்றும், எந்த இடமும் அதற்கு விதிவிலக்கல்ல என்றும் அவ்விரு அமைப்புகளும் வலியுறுத்தின. 

வீடுதான் பெண்களுக்கும் சிறுமியருக்கும் ஆக அபத்தான இடமாக இருக்கிறது என்று அவை குறிப்பிட்டன.

சென்ற ஆண்டு ஆப்பிரிக்காவில்தான் ஆக அதிகமாக 21,700 பெண்களும் சிறுமியரும் காதலர் அல்லது உறவினரால் கொல்லப்பட்டனர் என்று அறிக்கையில் தெரியவந்தது.

அந்த கண்டத்தில் ஒவ்வொரு 100,000 பெண்களுக்கான அந்த எண்ணிக்கையும் ஆக அதிகமாக 2.9ஆகப் பதிவானது.

லத்தீன், வட அமெரிக்க கண்டங்களிலும் அந்த எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அவற்றில் ஒவ்வொரு 100,000 பெண்களுக்கும் 2.9 பெண்கள், சிறுமியர் காதலர் அல்லது உறவினரால் கொல்லப்பட்டனர்.

அதேபோல் ஓ‌ஷனியா கண்டத்திலும் எண்ணிக்கை 1.5 என அதிகமாகப் பதிவானது.

ஆசிய, ஐரோப்பிய கண்டங்களில் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக இருந்தது. ஆசியாவில் அந்த எண்ணிக்கை 0.8ஆகவும் ஐரோப்பாவில் 0.6ஆகவும் இருந்தன.

தினமும் சராசரியாக 140 பெண்கள் உறவினர், காதலரால் கொல்லப்பட்டனர்- ஐ .நா மாதர் அமைப்பு கடந்த ஆண்டு, தினமும் சராசரியாக 140 பெண்களும் சிறுமியரும் காதலர் அல்லது உறவினரால் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் (ஐநா) இரு அமைப்புகள் தெரிவித்துள்ளன.அந்த வகையில் பெண்கள் வீட்டில் உயிரிழக்கக்கூடிய வாய்ப்புதான் அதிகம் உள்ளதாக, இன்று (25) தெரிவிக்கப்பட்டது.உலகளவில் 2023ஆம் ஆண்டில் சுமார் 51,100 பெண்கள், சிறுமியர் காதலர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டனர். அந்த எண்ணிக்கை, 2022ஆம் ஆண்டு பதிவான 48,800ஐவிட அதிகம் என்று ஐநா மாதர் அமைப்பு (U.N. Women), ஐநா போதைப்பொருள், குற்ற அலுவலகம் ஆகிய அமைப்புகள் குறிப்பிட்டன.பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைக்கு எதிரான அனைத்துலக தினமான இன்று (25) இப்புள்ளிவிவரங்களைக் கொண்ட அறிக்கை வெளியிடப்பட்டது.இதன் தொடர்பில் பல நாடுளிடமிருந்து கூடுதல் புள்ளிவிவரங்கள் கிடைப்பதுதான் எண்ணிக்கை அதிகரித்தற்குக் காரணம் என்றும் கூடுதல் பெண்கள் கொல்லப்பட்டது காரணம் அல்ல என்றும் அறிக்கை சுட்டியது.அதேவேளை, எல்லா இடங்களிலும் பெண்கள், சிறுமியர் தொடர்ந்து பாலினம் சார்ந்த வன்முறைக்கு ஆளாகின்றனர் என்றும், எந்த இடமும் அதற்கு விதிவிலக்கல்ல என்றும் அவ்விரு அமைப்புகளும் வலியுறுத்தின. வீடுதான் பெண்களுக்கும் சிறுமியருக்கும் ஆக அபத்தான இடமாக இருக்கிறது என்று அவை குறிப்பிட்டன.சென்ற ஆண்டு ஆப்பிரிக்காவில்தான் ஆக அதிகமாக 21,700 பெண்களும் சிறுமியரும் காதலர் அல்லது உறவினரால் கொல்லப்பட்டனர் என்று அறிக்கையில் தெரியவந்தது.அந்த கண்டத்தில் ஒவ்வொரு 100,000 பெண்களுக்கான அந்த எண்ணிக்கையும் ஆக அதிகமாக 2.9ஆகப் பதிவானது.லத்தீன், வட அமெரிக்க கண்டங்களிலும் அந்த எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அவற்றில் ஒவ்வொரு 100,000 பெண்களுக்கும் 2.9 பெண்கள், சிறுமியர் காதலர் அல்லது உறவினரால் கொல்லப்பட்டனர்.அதேபோல் ஓ‌ஷனியா கண்டத்திலும் எண்ணிக்கை 1.5 என அதிகமாகப் பதிவானது.ஆசிய, ஐரோப்பிய கண்டங்களில் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக இருந்தது. ஆசியாவில் அந்த எண்ணிக்கை 0.8ஆகவும் ஐரோப்பாவில் 0.6ஆகவும் இருந்தன.

Advertisement

Advertisement

Advertisement