• May 02 2025

யாழில் மயங்கி விழுந்துஉயிரிழந்த முதியவர்; காரணம் என்ன?

Chithra / May 1st 2025, 4:42 pm
image


யாழ்ப்பாணம் - கோண்டாவில் வீதியால் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்து நேற்று உயிரிழந்துள்ளார். 

இதன்போது நாராயணன் வீதி, கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய கந்தசாமி கலியுகவரதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவர் பாரிசவாதம் மற்றும் பல நோயால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் நரம்பு வெடித்ததில் உயிரிழந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். 

மேலும் அவர் வருமானம் எதுவும் இன்றி வறுமையின் பிடியில் வாழ்ந்து வந்ததாகவும் கோவில்களில் யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்தியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். 

அத்துடன் அந்த நபர் காலை உணவை அருந்தாமல், நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக வீட்டார் தெரிவித்துள்ளனர். 

பின்னர் மதியம் கோண்டாவில் வீதியால் பயணித்தவேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார்.


பின்னர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். 

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

யாழில் மயங்கி விழுந்துஉயிரிழந்த முதியவர்; காரணம் என்ன யாழ்ப்பாணம் - கோண்டாவில் வீதியால் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்து நேற்று உயிரிழந்துள்ளார். இதன்போது நாராயணன் வீதி, கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய கந்தசாமி கலியுகவரதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த முதியவர் பாரிசவாதம் மற்றும் பல நோயால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் நரம்பு வெடித்ததில் உயிரிழந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் அவர் வருமானம் எதுவும் இன்றி வறுமையின் பிடியில் வாழ்ந்து வந்ததாகவும் கோவில்களில் யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்தியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். அத்துடன் அந்த நபர் காலை உணவை அருந்தாமல், நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக வீட்டார் தெரிவித்துள்ளனர். பின்னர் மதியம் கோண்டாவில் வீதியால் பயணித்தவேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார்.பின்னர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement