திருகோணமலை-மஹதிவுல்வெவ பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த வயோதிபர் ஒருவரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும் கன்தளாய் பிராந்தியத்துக்கு பொறுப்பான குற்றத் தடுப்பு பிரிவினரும் மொரவெவ பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நபரின் வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 25,000 மில்லி லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மஹதிவுல்வெவ -சுவர்ணஜயந்திபுர பகுதியைச் சேர்ந்தவர் (65வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேகம் நபரின் வீட்டை சோதனையிட்டதாகவும் இந்நிலையில் வீட்டு வளாகத்தில் மறைத்து வைப்பதற்காக கிடங்கு தோண்டப்பட்டிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த வயோதிபர் கைது samugammedia திருகோணமலை-மஹதிவுல்வெவ பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த வயோதிபர் ஒருவரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.இருப்பினும் கன்தளாய் பிராந்தியத்துக்கு பொறுப்பான குற்றத் தடுப்பு பிரிவினரும் மொரவெவ பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நபரின் வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 25,000 மில்லி லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மஹதிவுல்வெவ -சுவர்ணஜயந்திபுர பகுதியைச் சேர்ந்தவர் (65வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேகம் நபரின் வீட்டை சோதனையிட்டதாகவும் இந்நிலையில் வீட்டு வளாகத்தில் மறைத்து வைப்பதற்காக கிடங்கு தோண்டப்பட்டிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.