• Dec 31 2024

ஆங்கில கற்கை நெறியை பூர்த்தி செய்த : மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

Tharmini / Dec 26th 2024, 8:46 pm
image

JKC மற்றும் SLTC ஆகிய நிறுவனங்களின் இணை அணுசரனையில் இடம்பெற்ற ஆங்கில கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (21) ஆம் திகதி சுதுமலை குபேரமஹால் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

JKC நிறுவன இயக்குனரும், முன்னாள் மானிப்பாய் பிரதேசசபையின் தவிசாளருமாகிய அ. ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட செயலக அரச அதிபர் எஸ். முரளிதரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

மேலும், இந்த நிகழ்வில் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் பா. ஸ்ரீபவன், SLTC நிறுவன இயக்குநர் தே. பிறேமராஜா சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தார்கள்.

மேலும், ஆங்கில மொழி கற்கை ஆசிரியர்கள், கணனி கற்கை நெறி ஆசிரியர்கள் மற்றும் இணைப்பாளர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

கலை நிகழ்வுகளுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில், 65 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.





ஆங்கில கற்கை நெறியை பூர்த்தி செய்த : மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு JKC மற்றும் SLTC ஆகிய நிறுவனங்களின் இணை அணுசரனையில் இடம்பெற்ற ஆங்கில கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (21) ஆம் திகதி சுதுமலை குபேரமஹால் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.JKC நிறுவன இயக்குனரும், முன்னாள் மானிப்பாய் பிரதேசசபையின் தவிசாளருமாகிய அ. ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட செயலக அரச அதிபர் எஸ். முரளிதரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.மேலும், இந்த நிகழ்வில் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் பா. ஸ்ரீபவன், SLTC நிறுவன இயக்குநர் தே. பிறேமராஜா சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தார்கள்.மேலும், ஆங்கில மொழி கற்கை ஆசிரியர்கள், கணனி கற்கை நெறி ஆசிரியர்கள் மற்றும் இணைப்பாளர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். கலை நிகழ்வுகளுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில், 65 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement