• Jan 26 2025

உழைக்கும் வர்க்கத்திற்கு மதிப்பளிக்கும் தமிழ் இனப்பண்பாட்டின் வெளிப்பாடு தைப்பொங்கல் - சி. வி. கே. சிவஞானம்

Tharmini / Jan 13th 2025, 3:21 pm
image

தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற முதுமொழிக்கு அமைய எமது உறவுகள் அனைவரதுவாழ்வும் சூரிய ஒளியைப் போல் பிரகாசமாக அமைய வேண்டுமென பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன். என வட மாகாண சபையின்  அவைத்தலைவர் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில், உலகத் தமிழ் மக்களின் தொன்மைச் சிறப்புமிக்க தைப்பொங்கல் நிகழ்வு வீடுகள்தோறும் நிறுவனங்கள் தோறும் நாளை (14) மற்றும் (15.01.2025) ஆம் திகதிகளில் கொண்டாடப்படுகின்றது. 

தமிழ் இனத்தின் மரபுரிமை தினமாகவும் இது அமைகின்றது. உலகத்திலேயே பயிர்களுக்கு சக்தி வழங்கும் சூரியனுக்கும் ஏர் இழுக்கும் எருதுகளுக்கும் பொங்கல் மூலம் நன்றிக்கடன் செலுத்தும் தினமாகவே தைப்பொங்கல் விளங்குகின்றது.

இவை உழைக்கும் வர்க்கத்திற்கு மதிப்பளிக்கும் தமிழ் இனப்பண்பாட்டின் வெளிப்பாடு ஆகும். இது ஒரு சைவத்தமிழ் மக்களின் நிகழ்வாக உருவாகி வளர்ந்து வந்தாலும் காலப்போக்கில் தமிழ்த் தேசிய இனத்தின் பொங்கலாக பரிணமித்துள்ளது.

இந்துக்கள் அல்லாத ஏனைய சமயத்தவர்களுக்கும் குறிப்பாக கிறிஸ்தவ மக்களும் தைப்பொங்கலைக் கொண்டாடுவதை நாம் காணலாம். 

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற முதுமொழிக்கு அமைய எமது உறவுகள் அனைவரதுவாழ்வும் சூரிய ஒளியைப் போல் பிரகாசமாக அமைய வேண்டுமென பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன். என  வட மாகாண சபையின்  அவைத்தலைவர் மற்றும்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.



உழைக்கும் வர்க்கத்திற்கு மதிப்பளிக்கும் தமிழ் இனப்பண்பாட்டின் வெளிப்பாடு தைப்பொங்கல் - சி. வி. கே. சிவஞானம் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற முதுமொழிக்கு அமைய எமது உறவுகள் அனைவரதுவாழ்வும் சூரிய ஒளியைப் போல் பிரகாசமாக அமைய வேண்டுமென பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன். என வட மாகாண சபையின்  அவைத்தலைவர் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில், உலகத் தமிழ் மக்களின் தொன்மைச் சிறப்புமிக்க தைப்பொங்கல் நிகழ்வு வீடுகள்தோறும் நிறுவனங்கள் தோறும் நாளை (14) மற்றும் (15.01.2025) ஆம் திகதிகளில் கொண்டாடப்படுகின்றது. தமிழ் இனத்தின் மரபுரிமை தினமாகவும் இது அமைகின்றது. உலகத்திலேயே பயிர்களுக்கு சக்தி வழங்கும் சூரியனுக்கும் ஏர் இழுக்கும் எருதுகளுக்கும் பொங்கல் மூலம் நன்றிக்கடன் செலுத்தும் தினமாகவே தைப்பொங்கல் விளங்குகின்றது.இவை உழைக்கும் வர்க்கத்திற்கு மதிப்பளிக்கும் தமிழ் இனப்பண்பாட்டின் வெளிப்பாடு ஆகும். இது ஒரு சைவத்தமிழ் மக்களின் நிகழ்வாக உருவாகி வளர்ந்து வந்தாலும் காலப்போக்கில் தமிழ்த் தேசிய இனத்தின் பொங்கலாக பரிணமித்துள்ளது.இந்துக்கள் அல்லாத ஏனைய சமயத்தவர்களுக்கும் குறிப்பாக கிறிஸ்தவ மக்களும் தைப்பொங்கலைக் கொண்டாடுவதை நாம் காணலாம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற முதுமொழிக்கு அமைய எமது உறவுகள் அனைவரதுவாழ்வும் சூரிய ஒளியைப் போல் பிரகாசமாக அமைய வேண்டுமென பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன். என  வட மாகாண சபையின்  அவைத்தலைவர் மற்றும்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement