• Jan 13 2025

மலையகத்தில் சிவப்பு அரிசி தட்டுப்பாட்டால் மக்கள் அசௌகரியம்

Chithra / Jan 13th 2025, 3:17 pm
image


தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கொழும்பின் பல பாகங்களிலும் தைப்பொங்கல் வியாபாரம் வெகுவாக களைகட்டி இருந்தது.

பெருமளவான மக்கள் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் பொங்கல் பானைகளையும், கரும்புகள் மற்றும் தோரணம் செய்வதற்குரிய தென்னோலை, மாவிலையோடு, விறகுக் கட்டுக்கள் போன்றவற்றை கொள்வனவு செய்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இதன்போது, கடந்த  வருடத்தை விட குறிப்பிட்ட அளவான வியாபாரம் கூடி உள்ளதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர். 

அதேபோல மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

தமிழர்களுக்குரிய   திருநாளாகிய தைப்பொங்கலை நாங்கள் மிகவும் உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடி வருகின்றோம். 

கொழும்பை பொருத்தமட்டில் கரும்பு, பானை மற்றும் தோரணங்கள் போன்றவை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமம் உள்ளது. 

ஆகவே நாங்கள் வியாபாரிகளிடம் இருந்து அவற்றை பெற்றுக் கொள்வதில் சந்தோஷம் அடைகின்றோம் என்றனர்.


இந்நிலையில் மன்னார் மாவட்டத்திலும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கான பொருட்கொள்வனவில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்

குறிப்பாக நாளையதினம் பொங்கல் கொண்டாட்டங்களை மேற்கொள்வதற்கான உணவு பொருட்கள் பானை கரும்பு உள்ளடங்கலான பொருட்களை மக்கள் ஆர்வத்தோடு கொள்வனவு செய்வதை நகர் பகுதியில் அவதானிக்க கூடியதாக உள்ளது.





இதேவேளை இந்த தை திருநாளினை கொண்டாடுவதற்கு மலையக மக்களும் ஆயத்தமாகியுள்ளனர்.

தைப்பொங்களினை முன்னிட்டு மக்கள் பூசை பொருட்களையும் அத்தியவசிய பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக மலையக நகரங்களுக்கு மக்கள் வருகை தந்திருந்தனர்.

பொங்கல் வைப்பதற்காக பலர் புதுப்பானயினையும், பழங்களையும் கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக இருந்தன.

தற்போது, மலையகத்தில் சிவப்பு அரிசிக்கு பல இடங்களில் தட்டுப்பாடு நிலவுகின்றது. அதனால் சில மக்கள் வெள்ளை அரிசியை கொள்வனவு செய்கின்றனர்.

மேலும், தேங்காய் உள்ளிட்ட சில பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் பல அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.


மலையகத்தில் சிவப்பு அரிசி தட்டுப்பாட்டால் மக்கள் அசௌகரியம் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கொழும்பின் பல பாகங்களிலும் தைப்பொங்கல் வியாபாரம் வெகுவாக களைகட்டி இருந்தது.பெருமளவான மக்கள் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் பொங்கல் பானைகளையும், கரும்புகள் மற்றும் தோரணம் செய்வதற்குரிய தென்னோலை, மாவிலையோடு, விறகுக் கட்டுக்கள் போன்றவற்றை கொள்வனவு செய்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.இதன்போது, கடந்த  வருடத்தை விட குறிப்பிட்ட அளவான வியாபாரம் கூடி உள்ளதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர். அதேபோல மக்கள் கருத்து தெரிவிக்கையில்,தமிழர்களுக்குரிய   திருநாளாகிய தைப்பொங்கலை நாங்கள் மிகவும் உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடி வருகின்றோம். கொழும்பை பொருத்தமட்டில் கரும்பு, பானை மற்றும் தோரணங்கள் போன்றவை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமம் உள்ளது. ஆகவே நாங்கள் வியாபாரிகளிடம் இருந்து அவற்றை பெற்றுக் கொள்வதில் சந்தோஷம் அடைகின்றோம் என்றனர்.இந்நிலையில் மன்னார் மாவட்டத்திலும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கான பொருட்கொள்வனவில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்குறிப்பாக நாளையதினம் பொங்கல் கொண்டாட்டங்களை மேற்கொள்வதற்கான உணவு பொருட்கள் பானை கரும்பு உள்ளடங்கலான பொருட்களை மக்கள் ஆர்வத்தோடு கொள்வனவு செய்வதை நகர் பகுதியில் அவதானிக்க கூடியதாக உள்ளது.இதேவேளை இந்த தை திருநாளினை கொண்டாடுவதற்கு மலையக மக்களும் ஆயத்தமாகியுள்ளனர்.தைப்பொங்களினை முன்னிட்டு மக்கள் பூசை பொருட்களையும் அத்தியவசிய பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக மலையக நகரங்களுக்கு மக்கள் வருகை தந்திருந்தனர்.பொங்கல் வைப்பதற்காக பலர் புதுப்பானயினையும், பழங்களையும் கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக இருந்தன.தற்போது, மலையகத்தில் சிவப்பு அரிசிக்கு பல இடங்களில் தட்டுப்பாடு நிலவுகின்றது. அதனால் சில மக்கள் வெள்ளை அரிசியை கொள்வனவு செய்கின்றனர்.மேலும், தேங்காய் உள்ளிட்ட சில பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் பல அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement