• Nov 28 2024

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Chithra / Feb 28th 2024, 9:19 am
image

 

அஸ்வெசும இரண்டாம் கட்ட நடவடிக்கையின் முதல் 12 நாட்களில் 30,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் நேற்று (27) இடம்பெற்ற வேலையின்மை தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஏறக்குறைய 2 மில்லியன் மக்கள் ஏற்கனவே நிவாரண உதவிகளைப் பெற்று வருவதாகவும், இரண்டாம் கட்டத்தின் கீழ், புதிய விண்ணப்பதாரர்களுடன் 2.4 மில்லியன் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே நோக்கமாகும் என்றும் கூறியுள்ளார்.

இரண்டாம் கட்ட விண்ணப்பம் ஆரம்பிக்கப்பட்ட பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் நேற்று (27ஆம் திகதி) வரை சுமார் 30,000 விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 8,750 விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் இணையம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு  அஸ்வெசும இரண்டாம் கட்ட நடவடிக்கையின் முதல் 12 நாட்களில் 30,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் நேற்று (27) இடம்பெற்ற வேலையின்மை தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.ஏறக்குறைய 2 மில்லியன் மக்கள் ஏற்கனவே நிவாரண உதவிகளைப் பெற்று வருவதாகவும், இரண்டாம் கட்டத்தின் கீழ், புதிய விண்ணப்பதாரர்களுடன் 2.4 மில்லியன் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே நோக்கமாகும் என்றும் கூறியுள்ளார்.இரண்டாம் கட்ட விண்ணப்பம் ஆரம்பிக்கப்பட்ட பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் நேற்று (27ஆம் திகதி) வரை சுமார் 30,000 விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அவற்றில் 8,750 விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் இணையம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement