• Sep 17 2024

இலங்கையில் பிறப்பு சான்றிதழில் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Chithra / Jan 1st 2023, 7:34 am
image

Advertisement

பிறப்புச் சான்றிதழைப் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் எதிர்காலத்தில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களால் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை நெறிப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பதிவாளர் நாயக திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளை நெறிப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் டிசம்பர் 31ஆம் திகதி முதல் அரச சேவையில் இருந்து 30,000 அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற்ற நிலையில் அரச நிறுவங்களினால் வழங்கப்படும் சேவைகளுக்கு இடையூறு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இலங்கையில் பல திருத்தங்களுடன் பிறப்புச் சான்றிதழை வழங்க பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, ஒருவருக்கான தேசிய அடையாள அட்டை இலக்கம் பிறக்கும் போதே புதிய பிறப்புச் சான்றிதழில் பதியப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது காணப்படும் பெற்றோரின் திருமணம் தொடர்பான தகவல்களை பதிவு செய்யும் பகுதியும் நீக்கப்படவுள்ளதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் பிறப்பு சான்றிதழில் தொடர்பில் வெளியான அறிவிப்பு பிறப்புச் சான்றிதழைப் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் எதிர்காலத்தில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த தெரிவித்துள்ளார்.அரச நிறுவனங்களால் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை நெறிப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், பதிவாளர் நாயக திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளை நெறிப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் டிசம்பர் 31ஆம் திகதி முதல் அரச சேவையில் இருந்து 30,000 அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற்ற நிலையில் அரச நிறுவங்களினால் வழங்கப்படும் சேவைகளுக்கு இடையூறு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இலங்கையில் பல திருத்தங்களுடன் பிறப்புச் சான்றிதழை வழங்க பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.இதன்படி, ஒருவருக்கான தேசிய அடையாள அட்டை இலக்கம் பிறக்கும் போதே புதிய பிறப்புச் சான்றிதழில் பதியப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தற்போது காணப்படும் பெற்றோரின் திருமணம் தொடர்பான தகவல்களை பதிவு செய்யும் பகுதியும் நீக்கப்படவுள்ளதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement