• May 02 2024

மின்வெட்டு குறித்து எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட மற்றுமொரு அறிவிப்பு! samugammedia

Chithra / Aug 8th 2023, 2:09 pm
image

Advertisement

இலங்கை மின்சார சபை தடையில்லா மின்சார விநியோகத்தை உறுதி செய்வதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்குத் தேவையான துணை மின்சாரத்தை இலங்கை மின்சார சபை வாங்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சமனல குளத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிடப்படுவதால் ஆகஸ்ட் 16ஆம் திகதியுடன் சமனல குளத்தில் மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மாத்தறை, காலி, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூன்று மணிநேர மின்வெட்டுக்கு செல்ல வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (08.08.2023) இடம்பெற்ற விசேட உரையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மின்வெட்டு குறித்து எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட மற்றுமொரு அறிவிப்பு samugammedia இலங்கை மின்சார சபை தடையில்லா மின்சார விநியோகத்தை உறுதி செய்வதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.அத்துடன் திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.அத்துடன் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்குத் தேவையான துணை மின்சாரத்தை இலங்கை மின்சார சபை வாங்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.சமனல குளத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிடப்படுவதால் ஆகஸ்ட் 16ஆம் திகதியுடன் சமனல குளத்தில் மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் மாத்தறை, காலி, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூன்று மணிநேர மின்வெட்டுக்கு செல்ல வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (08.08.2023) இடம்பெற்ற விசேட உரையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement