• Apr 20 2024

ஒடிசாவில் மீண்டும் தடம் புரண்டு ரயில் விபத்து..! அதிர்ச்சியில் மக்கள்..!samugammedia

Sharmi / Jun 5th 2023, 1:02 pm
image

Advertisement

ஒடிசா மாநிலம் பர்கார் பகுதியில்  இன்றைய தினம்  சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுண்ணாம்பு கற்கள் ஏற்றி வந்த சரக்கு ரயில் ஒன்றே  ஒடிசா மாநிலம் பார்கர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது தடம் புரண்டுள்ளது.

அதன் போது  ரயிலின் ஐந்து பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று முதற்கட்டமாக  அங்கிருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.



அத்துடன், அந்த ரயில் பாதையில் வேறு ரயில்கள் வராமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தடம் புரண்ட ரயிலை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், குறித்த  விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறிருக்கையில், கடந்த வெள்ளிக் கிழமை இரவு ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.அந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதுடன், 900 ற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இது, கடந்த பல ஆண்டுகளில் நடந்துள்ள மிக கோரமான விபத்தாக கருதப்பட்ட நிலையில், மேலும் ஒரு ரயில் விபத்துக்கு உள்ளாகியுள்ளமை அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசாவில் மீண்டும் தடம் புரண்டு ரயில் விபத்து. அதிர்ச்சியில் மக்கள்.samugammedia ஒடிசா மாநிலம் பர்கார் பகுதியில்  இன்றைய தினம்  சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுண்ணாம்பு கற்கள் ஏற்றி வந்த சரக்கு ரயில் ஒன்றே  ஒடிசா மாநிலம் பார்கர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது தடம் புரண்டுள்ளது. அதன் போது  ரயிலின் ஐந்து பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று முதற்கட்டமாக  அங்கிருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன், அந்த ரயில் பாதையில் வேறு ரயில்கள் வராமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன. தடம் புரண்ட ரயிலை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், குறித்த  விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறிருக்கையில், கடந்த வெள்ளிக் கிழமை இரவு ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.அந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதுடன், 900 ற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இது, கடந்த பல ஆண்டுகளில் நடந்துள்ள மிக கோரமான விபத்தாக கருதப்பட்ட நிலையில், மேலும் ஒரு ரயில் விபத்துக்கு உள்ளாகியுள்ளமை அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement