• May 19 2024

பயங்கரவாத சட்டத்தை விட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அபாயகரமானது: சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில் தெரிவிப்பு!samugammedia

Sharmi / Apr 13th 2023, 2:03 pm
image

Advertisement

பயங்கரவாத சட்டத்தை விட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகவும் அபாயகரமானது என மாற்றத்திற்கான முன்னணி செயற்பாட்டாளர் சிரேஸ்ட சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்  தொடர்பில் நாட்டு மக்களின் விழிப்புணர்ச்சி அவசியமானதாக காணப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில் மேலும் குறிப்பிடுகையில்,

1979 ஆம் ஆண்டு 6 மாதங்களுக்கு தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம். கடந்த 44 வருடங்களாக தேசிய பாதுகாப்புக்கு அவசியம் என்று சொல்லப்பட்டாலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியது. இந்த பின்னணியிலேயே எதிர்ப்புக் கோஷம் உருவாகி இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று கையொப்ப வேட்டைகள் நடாத்தப்பட்டன. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் நாட்டு மக்களின் விழிப்புணர்ச்சி அவசியமானதாக காணப்படுகிறது.

ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் சிவில் சமூகமும் பயந்து கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் வெளிநாடுகளுக்குச் சென்று பேட்டி கொடுத்தாலும்  நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஆபத்தாக அமைந்து. இலகுவாக கைது செய்ய படக்கூடியதாக காணப்படுகிறது.

இந்த சட்டம் அரசியல் அமைப்பிற்கு முரண்பாடாகவும், பழிவாங்கும் நோக்கிலும் காணப்படுகிறது. நீதிமன்றில் வழக்கு விளக்கத்திற்கு எடுக்காமல் சட்டமா அதிபர் விரும்பினால் புனர் வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பவும் முடியும். இந்தச் சட்டத்தின் ஏற்பாடுகளை பார்க்கின்ற பொழுது அடிப்படை உரிமைகளையும் மனித உரிமைகளையும் மீறுகின்றது. இச்சட்டத்தினால் பயங்கரவாதத்தை தடுக்க முடியுமா? மாறாக பயங்கரவாதத்தை தூண்டுவதாக காணப்படுகின்றது.

தேசிய பாதுகாப்பு, ஜனநாயகத்தை பாதுகாத்தல் என்ற போர்வையில் ஆட்சியாளர்களை பாதுகாக்கின்ற ஒரு சட்டமாக எதிர்காலத்தில் மாற்றமடையும். ஏனென்றால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் காணப்படுகிறது.

இந்த புதிய சட்டத்திலேயே 14 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற ஏற்பாடு காணப்பட்டாலும் ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடங்களின் பின்னரே நிகழக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத சட்டத்தை விட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அபாயகரமானது: சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில் தெரிவிப்புsamugammedia பயங்கரவாத சட்டத்தை விட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகவும் அபாயகரமானது என மாற்றத்திற்கான முன்னணி செயற்பாட்டாளர் சிரேஸ்ட சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.தற்போது கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்  தொடர்பில் நாட்டு மக்களின் விழிப்புணர்ச்சி அவசியமானதாக காணப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில் மேலும் குறிப்பிடுகையில்,1979 ஆம் ஆண்டு 6 மாதங்களுக்கு தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம். கடந்த 44 வருடங்களாக தேசிய பாதுகாப்புக்கு அவசியம் என்று சொல்லப்பட்டாலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியது. இந்த பின்னணியிலேயே எதிர்ப்புக் கோஷம் உருவாகி இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று கையொப்ப வேட்டைகள் நடாத்தப்பட்டன. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் நாட்டு மக்களின் விழிப்புணர்ச்சி அவசியமானதாக காணப்படுகிறது. ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் சிவில் சமூகமும் பயந்து கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் வெளிநாடுகளுக்குச் சென்று பேட்டி கொடுத்தாலும்  நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஆபத்தாக அமைந்து. இலகுவாக கைது செய்ய படக்கூடியதாக காணப்படுகிறது.இந்த சட்டம் அரசியல் அமைப்பிற்கு முரண்பாடாகவும், பழிவாங்கும் நோக்கிலும் காணப்படுகிறது. நீதிமன்றில் வழக்கு விளக்கத்திற்கு எடுக்காமல் சட்டமா அதிபர் விரும்பினால் புனர் வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பவும் முடியும். இந்தச் சட்டத்தின் ஏற்பாடுகளை பார்க்கின்ற பொழுது அடிப்படை உரிமைகளையும் மனித உரிமைகளையும் மீறுகின்றது. இச்சட்டத்தினால் பயங்கரவாதத்தை தடுக்க முடியுமா மாறாக பயங்கரவாதத்தை தூண்டுவதாக காணப்படுகின்றது. தேசிய பாதுகாப்பு, ஜனநாயகத்தை பாதுகாத்தல் என்ற போர்வையில் ஆட்சியாளர்களை பாதுகாக்கின்ற ஒரு சட்டமாக எதிர்காலத்தில் மாற்றமடையும். ஏனென்றால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் காணப்படுகிறது.இந்த புதிய சட்டத்திலேயே 14 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற ஏற்பாடு காணப்பட்டாலும் ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடங்களின் பின்னரே நிகழக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement