• May 03 2024

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில்! samugammedia

Tamil nila / Sep 17th 2023, 10:46 am
image

Advertisement

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடந்த சனிக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, இந்த ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அதனை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்ததுடன், பலரது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்று புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக அறிவிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ள குறைபாடுகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் முதல் வாசிப்பின் பின்னர் அதற்கு எதிராக ஆட்சேபனைகள் இருப்பின் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்ய முடியும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் samugammedia பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடந்த சனிக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.முன்னதாக, இந்த ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அதனை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்ததுடன், பலரது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்று புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.முதன்முறையாக அறிவிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ள குறைபாடுகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் முதல் வாசிப்பின் பின்னர் அதற்கு எதிராக ஆட்சேபனைகள் இருப்பின் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்ய முடியும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement