• Jan 23 2025

நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர மறந்துவிட்டார்; உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேற தயார்! - மகிந்த பதிலடி

Chithra / Jan 21st 2025, 11:24 am
image


நான் மகிந்த ராஜபக்ச என்பதை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார், எனக்கு எழுத்து மூல வேண்டுகோள் விடுத்தால், உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேற தயார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில், அமைச்சரவையின் அனுமதியின் பின்னரே தனக்கு உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலம் வழங்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனது பாதுகாப்பிற்காக அதனை வழங்கினார்கள். அரசமைப்பின் கீழ் எனக்கு அதற்கான உரிமையுள்ளது.

நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறுவதால் ஜனாதிபதிக்கு பலாபலன்கள் கிட்டும் என்றால், நான் அங்கிருந்து வெளியேற தயார்.

நான் பலவந்தமாக அந்த வீட்டை பிடித்துவைத்திருக்கவில்லை என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அனுர குமார திசநாயக்க நாட்டின் ஜனாதிபதி என்ற போதிலும், அவர் எதிர்க்கட்சி அரசியல்வாதி போல நடந்து கொள்கின்றார்.

நான் மகிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார், 

எனக்கு எழுத்து மூல வேண்டுகோள் விடுத்தால், உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயார் என்பதை நான் ஜனாதிபதிக்கு தெரிவிக்கின்றேன் என  குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களிற்கு நிவாரணத்தை வழங்குவதற்கு பதில் அனுர குமார திசநாயக்க அரசியல் மேடைகளில் மக்களை கவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார், தனது தோல்விகளை மறைப்பதற்காகவே அவர் இதனை செய்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி மேலும்  தெரிவித்துள்ளார்.

நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர மறந்துவிட்டார்; உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேற தயார் - மகிந்த பதிலடி நான் மகிந்த ராஜபக்ச என்பதை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார், எனக்கு எழுத்து மூல வேண்டுகோள் விடுத்தால், உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேற தயார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில், அமைச்சரவையின் அனுமதியின் பின்னரே தனக்கு உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலம் வழங்கப்பட்டது.முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனது பாதுகாப்பிற்காக அதனை வழங்கினார்கள். அரசமைப்பின் கீழ் எனக்கு அதற்கான உரிமையுள்ளது.நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறுவதால் ஜனாதிபதிக்கு பலாபலன்கள் கிட்டும் என்றால், நான் அங்கிருந்து வெளியேற தயார்.நான் பலவந்தமாக அந்த வீட்டை பிடித்துவைத்திருக்கவில்லை என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.அனுர குமார திசநாயக்க நாட்டின் ஜனாதிபதி என்ற போதிலும், அவர் எதிர்க்கட்சி அரசியல்வாதி போல நடந்து கொள்கின்றார்.நான் மகிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார், எனக்கு எழுத்து மூல வேண்டுகோள் விடுத்தால், உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயார் என்பதை நான் ஜனாதிபதிக்கு தெரிவிக்கின்றேன் என  குறிப்பிட்டுள்ளார்.பொதுமக்களிற்கு நிவாரணத்தை வழங்குவதற்கு பதில் அனுர குமார திசநாயக்க அரசியல் மேடைகளில் மக்களை கவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார், தனது தோல்விகளை மறைப்பதற்காகவே அவர் இதனை செய்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி மேலும்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement