அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை விடவும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூடுதலாக வேலை செய்துள்ளார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார், பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் வரையில் ஆயத்தமாவதற்கு அவருக்கு கால அவகாசம் இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கு 75 நாட்கள் கால இடைவெளி காணப்பட்டதனால் ஆட்சிக்கு தேவையான அரச இயந்திரத்தை உருவாக்க முடிந்தது.
டொனால்ட் ட்ரம்பிடம், ஜனாதிபதி அநுரகுமார பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வாதம் ஏற்புடையதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரம்ப் 75 நாட்களில் செய்யாத வேலைகளை ஜனாதிபதி அநுரகுமார 63 நாட்களில் செய்துள்ளார் என பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் உலக சுகாதார ஸ்தாபனத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் போற்றக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாதாரண மனிதர்களின் பிள்ளைகள் இன்று நாட்டின் முக்கிய ஆட்சிப் பொறுப்புக்களை வகிப்பதாகவும் அதனை வரவேற்க வேண்டுமே தவிர விமர்சனம் செய்யக் கூடாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பை விட அநுரகுமார கூடுதலாக வேலை செய்துள்ளார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை விடவும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூடுதலாக வேலை செய்துள்ளார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.ட்ரம்ப் கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார், பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் வரையில் ஆயத்தமாவதற்கு அவருக்கு கால அவகாசம் இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கு 75 நாட்கள் கால இடைவெளி காணப்பட்டதனால் ஆட்சிக்கு தேவையான அரச இயந்திரத்தை உருவாக்க முடிந்தது.டொனால்ட் ட்ரம்பிடம், ஜனாதிபதி அநுரகுமார பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வாதம் ஏற்புடையதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ட்ரம்ப் 75 நாட்களில் செய்யாத வேலைகளை ஜனாதிபதி அநுரகுமார 63 நாட்களில் செய்துள்ளார் என பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.ட்ரம்ப் உலக சுகாதார ஸ்தாபனத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் போற்றக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.சாதாரண மனிதர்களின் பிள்ளைகள் இன்று நாட்டின் முக்கிய ஆட்சிப் பொறுப்புக்களை வகிப்பதாகவும் அதனை வரவேற்க வேண்டுமே தவிர விமர்சனம் செய்யக் கூடாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.