• Nov 23 2024

புத்தாண்டுக்காக 470.6 மில்லியனுக்கு ஆடைகள் இறக்குமதி..!!

Tamil nila / Mar 31st 2024, 8:55 pm
image

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த வருடம் (2024) ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் ஆடை மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையானவற்றின் இறக்குமதிக்காக 470.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2023) ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில், ஆடை மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையானவை இறக்குமதிக்காக 383.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டது.

குறித்த இந்த அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஆடை மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையானவற்றின் இறக்குமதி செய்வதற்கு 87.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது 22.7 சதவீதம் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் மட்டும் ஆடை மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையானவற்றின் இறக்குமதி செய்ய செலவிடப்பட்ட தொகை 246.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள். சிங்கள புத்தாண்டு காரணமாக, துணி இறக்குமதி அதிகரித்திருந்தது.

புத்தாண்டுக்காக 470.6 மில்லியனுக்கு ஆடைகள் இறக்குமதி. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த வருடம் (2024) ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் ஆடை மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையானவற்றின் இறக்குமதிக்காக 470.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு (2023) ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில், ஆடை மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையானவை இறக்குமதிக்காக 383.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டது.குறித்த இந்த அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஆடை மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையானவற்றின் இறக்குமதி செய்வதற்கு 87.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது 22.7 சதவீதம் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் மட்டும் ஆடை மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையானவற்றின் இறக்குமதி செய்ய செலவிடப்பட்ட தொகை 246.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள். சிங்கள புத்தாண்டு காரணமாக, துணி இறக்குமதி அதிகரித்திருந்தது.

Advertisement

Advertisement

Advertisement