• May 24 2025

முக்கிய அரச பதவிகளில் தேசிய மக்கள் சக்தியினர் நியமனம்! ஊழலை ஒழிக்க முடியாது! எதிர்க்கட்சி விசனம்

Chithra / May 23rd 2025, 7:57 pm
image

நாட்டில் ஊழல் மோசடிகளுக்கு அரச சேவை கட்டமைப்பே காரணம் என அமைச்சர் லால் காந்த குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் அரச நிறுவனங்கள், திணைக்களங்களில் முக்கிய பதவிகளுக்கு தேசிய மக்கள் சக்தியினரே நியமிக்கப்படுகின்றனர். அவ்வாறிருக்கையில் எவ்வாறு ஊழல் மோசடியை ஒழிக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் ஊழல் மோசடிகளுக்கு அரச சேவை கட்டமைப்பே காரணம் என அமைச்சர் லால் காந்த குறிப்பிட்டிருக்கின்றார். 

ஆனால் ஆட்சிக்கு வர முன்னர் ஏனைய கட்சிகளின் அரசியல்வாதிகள் மீது தான் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. 

அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்தால் மாத்திரமே ஊழல் சாத்தியமாகும் என்பதை நாம் அமைச்சர் லால் காந்தவிடம் தெரிவிக்க விரும்புகின்றோம்.

இவ்வாறு அரச கட்டமைப்பில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் அரச கணக்காய்வாளராலேயே ஆராயப்படும். அவ்வாறிருக்கையில் அரசாங்கத்துக்கு மிகவும் பரீட்சயமான ஒருவரை கணக்காய்வாளராக நியமிக்க முயற்சிக்கப்படுகிறது. 

இரு மாதங்கள் அரச கணக்காய்வாளர் பதவி வெற்றிடமாகவுள்ளது. அப்பதவிக்கு ஜனாதிபதியால் ஒருவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டு அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் அரசியலமைப்பு பேரவை இரு சந்தர்ப்பங்களில் இந்த நபர் குறித்து ஆராய்வதற்கு கால அவகாசம் கோரியிருந்தது. 

அதன் பின்னர் அரசியலமைப்பு பேரவையின் ஐந்து உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்துள்ளதோடு, பிரதமர் ஹரினி, அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட மூவர் இதற்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர். 

லால் காந்த குறிப்பிடுவதைப் போன்று ஊழல் இடம்பெற்றால் அவை தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்கு பலமான கணக்காய்வு அவசியமாகும்.

அதற்கு அனுபவம் மிக்க பொறிமுறையொன்றே அவசியமாகும். ஆனால் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நபர், அவரது பல்கலைக்கழக நண்பராவார். அது மாத்திரமின்றி சதொச தலைவர், உப்பு அதிகாரசபை தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் ஜனாதிபதியின் நண்பர்களாவர்.

 இவ்வாறான அரசியல் நியமனங்கள் இருக்கும் போது நாட்டில் ஒருபோதும் ஊழலை ஒழிக்க முடியாது என்றார். 

முக்கிய அரச பதவிகளில் தேசிய மக்கள் சக்தியினர் நியமனம் ஊழலை ஒழிக்க முடியாது எதிர்க்கட்சி விசனம் நாட்டில் ஊழல் மோசடிகளுக்கு அரச சேவை கட்டமைப்பே காரணம் என அமைச்சர் லால் காந்த குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் அரச நிறுவனங்கள், திணைக்களங்களில் முக்கிய பதவிகளுக்கு தேசிய மக்கள் சக்தியினரே நியமிக்கப்படுகின்றனர். அவ்வாறிருக்கையில் எவ்வாறு ஊழல் மோசடியை ஒழிக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,நாட்டில் ஊழல் மோசடிகளுக்கு அரச சேவை கட்டமைப்பே காரணம் என அமைச்சர் லால் காந்த குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் ஆட்சிக்கு வர முன்னர் ஏனைய கட்சிகளின் அரசியல்வாதிகள் மீது தான் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்தால் மாத்திரமே ஊழல் சாத்தியமாகும் என்பதை நாம் அமைச்சர் லால் காந்தவிடம் தெரிவிக்க விரும்புகின்றோம்.இவ்வாறு அரச கட்டமைப்பில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் அரச கணக்காய்வாளராலேயே ஆராயப்படும். அவ்வாறிருக்கையில் அரசாங்கத்துக்கு மிகவும் பரீட்சயமான ஒருவரை கணக்காய்வாளராக நியமிக்க முயற்சிக்கப்படுகிறது. இரு மாதங்கள் அரச கணக்காய்வாளர் பதவி வெற்றிடமாகவுள்ளது. அப்பதவிக்கு ஜனாதிபதியால் ஒருவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டு அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.எவ்வாறிருப்பினும் அரசியலமைப்பு பேரவை இரு சந்தர்ப்பங்களில் இந்த நபர் குறித்து ஆராய்வதற்கு கால அவகாசம் கோரியிருந்தது. அதன் பின்னர் அரசியலமைப்பு பேரவையின் ஐந்து உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்துள்ளதோடு, பிரதமர் ஹரினி, அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட மூவர் இதற்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர். லால் காந்த குறிப்பிடுவதைப் போன்று ஊழல் இடம்பெற்றால் அவை தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்கு பலமான கணக்காய்வு அவசியமாகும்.அதற்கு அனுபவம் மிக்க பொறிமுறையொன்றே அவசியமாகும். ஆனால் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நபர், அவரது பல்கலைக்கழக நண்பராவார். அது மாத்திரமின்றி சதொச தலைவர், உப்பு அதிகாரசபை தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் ஜனாதிபதியின் நண்பர்களாவர். இவ்வாறான அரசியல் நியமனங்கள் இருக்கும் போது நாட்டில் ஒருபோதும் ஊழலை ஒழிக்க முடியாது என்றார். 

Advertisement

Advertisement

Advertisement