• May 19 2024

நாட்டின் பிரச்சனைகள் முடிந்துவிட்டதா.?? ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது - ஹரினி அமரசூரிய..!samugammedia

Sharmi / Jun 9th 2023, 11:58 am
image

Advertisement

நேற்றையதினம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னால் இடம்பெற்ற போராட்டத்தின் போது நடைபாதையால் சென்ற மக்களையும் பொலிசார் தடுத்து நிறுத்தியிருந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடானுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்றைய போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், பொருளாதாரம் மேம்பட்டதாக கூறப்படுகிறது. நாட்டின் பிரச்சனைகள் முடிந்துவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால் தேர்தலை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படவேண்டும்

தற்போது ரணில் சொல்வது போன்றே தேர்தல்கள் ஆணைக்குழு செயல்பட ஆரம்பித்துள்ளது.

நாங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் தொடர்போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

நாடு முழுவதும் இந்த தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறோம். நாட்டில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு சுயாதீனமானது. இது வெறும் ஆரம்பம் தான். தேர்தலில் வெற்றி பெறும் வரை போராடுவோம் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் பிரச்சனைகள் முடிந்துவிட்டதா. ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது - ஹரினி அமரசூரிய.samugammedia நேற்றையதினம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னால் இடம்பெற்ற போராட்டத்தின் போது நடைபாதையால் சென்ற மக்களையும் பொலிசார் தடுத்து நிறுத்தியிருந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடானுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.நேற்றைய போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், பொருளாதாரம் மேம்பட்டதாக கூறப்படுகிறது. நாட்டின் பிரச்சனைகள் முடிந்துவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால் தேர்தலை தடுத்து நிறுத்தியுள்ளனர்.அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படவேண்டும் தற்போது ரணில் சொல்வது போன்றே தேர்தல்கள் ஆணைக்குழு செயல்பட ஆரம்பித்துள்ளது. நாங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் தொடர்போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.நாடு முழுவதும் இந்த தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறோம். நாட்டில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு சுயாதீனமானது. இது வெறும் ஆரம்பம் தான். தேர்தலில் வெற்றி பெறும் வரை போராடுவோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement