• Nov 21 2024

தொடர்ச்சியாக வாகனம் ஓட்டுபவரா நீங்கள் ? உங்களுக்கான எச்சரிக்கை!

Tamil nila / Jul 15th 2024, 10:54 pm
image

தற்போதைய காலப்பகுதியில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. 

அந்தவகையில் சாலைகளில் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருவதற்கு காரணம், பெரும்பாலான மக்களின் கவனக்குறைவு ஆகும். பாதுகாப்பு விதிகள் தெரியாமலும், தான்தோன்றி தனமாக வாகனங்களை ஓட்டுவதுமே நொடிப் பொழுதில் விபத்துகளுக்கு வழிவகை செய்கின்றன. பாதுகாப்பு விதிகளை அறியாமல் கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டுபவர்களால், அவர்களுக்கு மட்டுமின்றி சாலைகளில் பயணிக்கும் அப்பாவிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்து விடுகிறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியும் மற்றும் வேலையின்மையும்  இதற்கு மற்றும் ஓர் காரணம்

இதனால் இரவு பகல் பார்க்காமல் தொடர்ச்சியாக வாகனங்களை ஓட்டுகிறார்கள்.

 இவ்வாறான நிலைமைகளினால்  விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

அதுமட்டுமன்றி ஓட்டுனர்கள் சரியான உணவு பழக்கங்களை கடைபிடிப்பிதில்லை. 

நேரத்துக்கு உணவு உண்ணாமல் இருப்பது கூடுதலான எண்ணெய் உணவுகளை உண்ணுதல், 

வெள்ளை மா உணவுகளை விரும்பி உண்ணுதல் அதாவது “பரோட்டா ,கொத்து ரோட்டி, ரோல்ஸ் போன்றனவாகும். 

 இதன் காரணமாக காலப் போக்கில் உடலில் வாய்வு பிரச்சனை 

இரத்த குழாயில், கொழுப்பு படிதல் உடல் பருமன் அதிகரித்தல் போன்ற பிரச்சினைகள் வருகின்றன. 

இதில் மிகவும் கவனம் இருக்க வேண்டியது இரத்த குழாயில் கொழுப்பு படிதல் இதனால் மரடைப்பு கூட வரக்கூடிய சாத்தியங்கள் அதிகமாக காணப்படுகின்றது.

இதைத்  தவிர்க்க காலை மாலை 15 தொடக்கம் 20 நிமிடம்  வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் சரியான நேரத்துக்கு உணவு உண்ண வேண்டும்.

நித்திரை குறைந்தது 6 மணித்தியாலம் கொள்ள வேண்டும்.

இவ்வாறு நீங்கள் கடைப்பிடித்தால் உங்களுக்கும் நல்லது உங்களை நம்பி வரும் பயணிகளுக்கும் நல்லது கவனமாக வாகனத்தை செலுத்துங்கள்.  நாம் ஒரு வாகனத்தை இயக்குவதற்கு மெக்கானிக்கல் ரீதியாக எந்த அளவுக்கு புரிதலை ஏற்படுத்திக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு பாதுகாப்பான பயணங்களுக்காக போக்குவரத்து விதிகள் குறித்து தெரிந்து கொள்வதும் அவசியமாகும்.




தொடர்ச்சியாக வாகனம் ஓட்டுபவரா நீங்கள் உங்களுக்கான எச்சரிக்கை தற்போதைய காலப்பகுதியில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அந்தவகையில் சாலைகளில் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருவதற்கு காரணம், பெரும்பாலான மக்களின் கவனக்குறைவு ஆகும். பாதுகாப்பு விதிகள் தெரியாமலும், தான்தோன்றி தனமாக வாகனங்களை ஓட்டுவதுமே நொடிப் பொழுதில் விபத்துகளுக்கு வழிவகை செய்கின்றன. பாதுகாப்பு விதிகளை அறியாமல் கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டுபவர்களால், அவர்களுக்கு மட்டுமின்றி சாலைகளில் பயணிக்கும் அப்பாவிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்து விடுகிறது.தற்போதைய பொருளாதார நெருக்கடியும் மற்றும் வேலையின்மையும்  இதற்கு மற்றும் ஓர் காரணம்இதனால் இரவு பகல் பார்க்காமல் தொடர்ச்சியாக வாகனங்களை ஓட்டுகிறார்கள். இவ்வாறான நிலைமைகளினால்  விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.அதுமட்டுமன்றி ஓட்டுனர்கள் சரியான உணவு பழக்கங்களை கடைபிடிப்பிதில்லை. நேரத்துக்கு உணவு உண்ணாமல் இருப்பது கூடுதலான எண்ணெய் உணவுகளை உண்ணுதல், வெள்ளை மா உணவுகளை விரும்பி உண்ணுதல் அதாவது “பரோட்டா ,கொத்து ரோட்டி, ரோல்ஸ் போன்றனவாகும்.  இதன் காரணமாக காலப் போக்கில் உடலில் வாய்வு பிரச்சனை இரத்த குழாயில், கொழுப்பு படிதல் உடல் பருமன் அதிகரித்தல் போன்ற பிரச்சினைகள் வருகின்றன. இதில் மிகவும் கவனம் இருக்க வேண்டியது இரத்த குழாயில் கொழுப்பு படிதல் இதனால் மரடைப்பு கூட வரக்கூடிய சாத்தியங்கள் அதிகமாக காணப்படுகின்றது.இதைத்  தவிர்க்க காலை மாலை 15 தொடக்கம் 20 நிமிடம்  வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் சரியான நேரத்துக்கு உணவு உண்ண வேண்டும்.நித்திரை குறைந்தது 6 மணித்தியாலம் கொள்ள வேண்டும்.இவ்வாறு நீங்கள் கடைப்பிடித்தால் உங்களுக்கும் நல்லது உங்களை நம்பி வரும் பயணிகளுக்கும் நல்லது கவனமாக வாகனத்தை செலுத்துங்கள்.  நாம் ஒரு வாகனத்தை இயக்குவதற்கு மெக்கானிக்கல் ரீதியாக எந்த அளவுக்கு புரிதலை ஏற்படுத்திக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு பாதுகாப்பான பயணங்களுக்காக போக்குவரத்து விதிகள் குறித்து தெரிந்து கொள்வதும் அவசியமாகும்.

Advertisement

Advertisement

Advertisement