• May 08 2025

பொலிஸார் மீது கைக்குண்டை வீச முயன்ற இராணுவ சிப்பாய்..! பெரும் பதற்றம்

Chithra / Dec 31st 2023, 11:53 am
image

 


வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு வைத்திருந்த நிலையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இராணுவ விசேட அதிரடிப்படையின் முன்னாள் உறுப்பினர் கெக்கிராவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கெக்கிராவ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட உடனடி நடவடிக்கையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெக்கிராவ நிகினியாவ மேகவெவ பிரதேசத்தில் வயலில் மறைந்திருந்த சந்தேக நபரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட போது, ​​சந்தேக நபர் தனது சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த கைக்குண்டு ஒன்றை எடுத்து பொலிஸ் அதிகாரிகள் மீது வீச முற்பட்டுள்ளார்.

அப்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் கையாண்ட உத்திகளாலும் திறமைகளாலும் சந்தேக நபரின் கைகளில் இருந்து குண்டை கைப்பற்றியதோடு குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.


பொலிஸார் மீது கைக்குண்டை வீச முயன்ற இராணுவ சிப்பாய். பெரும் பதற்றம்  வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு வைத்திருந்த நிலையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இராணுவ விசேட அதிரடிப்படையின் முன்னாள் உறுப்பினர் கெக்கிராவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.கெக்கிராவ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட உடனடி நடவடிக்கையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கெக்கிராவ நிகினியாவ மேகவெவ பிரதேசத்தில் வயலில் மறைந்திருந்த சந்தேக நபரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட போது, ​​சந்தேக நபர் தனது சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த கைக்குண்டு ஒன்றை எடுத்து பொலிஸ் அதிகாரிகள் மீது வீச முற்பட்டுள்ளார்.அப்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் கையாண்ட உத்திகளாலும் திறமைகளாலும் சந்தேக நபரின் கைகளில் இருந்து குண்டை கைப்பற்றியதோடு குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now