• Mar 05 2025

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு விஜயம் செய்த அஷ்ரப் தாஹிர் எம்.பி..!

Sharmi / Mar 4th 2025, 5:12 pm
image

தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை தக்க வைத்து தேசிய ரீதியில் மிளிரும் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்  நேற்றையதினம் (03) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டமைக்காக வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததுடன், அங்குள்ள தேவைகள் குறித்து வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். சஹிதுல் நஜீமுடன் விரிவாக கலந்துரையாடியிருந்தார்.

மேலும் அங்கு  பணிபுரியும் வலயக் கல்வி அலுவலக உதவி கல்வி, பிரதி கல்வி பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்களுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் கல்முனை கல்வி வலய கல்வி மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு விஜயம் செய்த அஷ்ரப் தாஹிர் எம்.பி. தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை தக்க வைத்து தேசிய ரீதியில் மிளிரும் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்  நேற்றையதினம் (03) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.இதன்போது தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டமைக்காக வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததுடன், அங்குள்ள தேவைகள் குறித்து வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். சஹிதுல் நஜீமுடன் விரிவாக கலந்துரையாடியிருந்தார்.மேலும் அங்கு  பணிபுரியும் வலயக் கல்வி அலுவலக உதவி கல்வி, பிரதி கல்வி பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்களுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் கல்முனை கல்வி வலய கல்வி மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement