• Nov 22 2024

விண்வெளியில் சிக்கிய விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல்

Tharun / Jun 27th 2024, 5:37 pm
image

அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து  கடந்த 5 ஆம் திகதி  ஸ்டார் லைனர்   சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு   புறப்பட்டது.    சுனிதா வில்லியம்ஸூம், அவருடன் சக விண்வெளி வீரராக புட்ச் வில்மோரும் சென்றனர். இரண்டு நாட்கள் கழித்து,   ஜூன் 7ம் திகதி  ஸ்டார் லைனர் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. இது சுனிதா வில்லியம்ஸ்ஸுக்கு மூன்றாவது பயணமாகும்.

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ளார். அவர்கள்  பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த சிக்கல் விரைவில் சரிசெய்யப்படவில்லையெனில் இப்பயணம் ஆபத்தில் முடியும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், விமானம் தயாரிப்பு நிறுவனமான போயிங், ஸ்பேஸ் ஷிப்பை தயாரித்திருக்கிறது. ஸ்டார் லைனர் என்று பெயரிடப்பட்ட இந்த ஸ்பேஸ் ஷிப் சர்வதேச விண்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை அழைத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் வரை நாசாதான் இந்த பணிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால், விண்வெளி துறையில் தனியாரை ஊக்குவிக்கும் விதமாக போயிங் நிறுவனத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கெனவே எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இதேபோல ஸ்பேஸ் ஷிப்களை வடிவமைத்திருக்கிறது. எனவே போயிங் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 'ஸ்டார் லைனர்' எனும் ஸ்பேஸ் ஷிப்பை வடிவமைத்திருந்தது.

இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இரண்டு மூன்று முறை ஸ்டார் லைனரின் பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

7ம் திக‌தி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற அவர்கள்  14ம் திக‌தி மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட மற்றொரு தொழில்நுட்ப கோளாறு ஆகியவை இந்த பயணத்தை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி தள்ளி போட்டது.  ஜூன் 26ம் திக‌தி   இவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால். ஸ்டார் லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால்,   இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர்.

இது நாசா விஞ்ஞானிகளிடையே லேசான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஜூலை 2ம் திக‌தி அனைத்து தொழில்நுட்ப கோளாறுகளும் சரி செய்யப்பட்டு இரண்டு வீரர்களும் பூமிக்கு பத்திரமாக அழைத்துவரப்படுவார்கள் என போயிங் தெரிவித்திருக்கிறது. சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்ப 6 மணி நேரங்கள் தேவைப்படும். இந்த 6 மணி நேர பயணத்தில் த்ரஸ்டர் ஃபெயிலியர், வால்வு சிக்கல்கள் மற்றும் ஹீலியம் வாயு கசிவு ஆகிவை இல்லாமல் இருக்க வேண்டும். ஒருவேளை இந்த பிரச்னை சரி செய்யப்படவில்லையெனில், கல்பனா சாவ்லாவுக்கு நேர்ந்ததை போல சுனிதாவுக்கும் நேரலாம் என்று விண்வெளி ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி துறையில் ஏராளமான சாதனைகளை படைத்திருக்கிறார். இவர் அடிப்படையில் ஒரு கடற்படை விமானியாவார். கடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக நாசா மூலம் விண்வெளிக்கு சென்றார். அதன் பின்னர் பல முறை விண்வெளிக்கு சென்று வந்திருக்கிறார். இதுவரை 322 நாட்களை அவர் விண்ணில் கழித்திருக்கிறார். அதுமட்டுமின்றி விண்ணில் நெடுநேரம் நடைபயின்ற முதல் பெண் என்ற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார்.

ஸ்டார் லைனர் மூலம் பயணம் மேற்கொண்ட சுனிதா, தனியார் ஸ்பேஸ் ஷிப் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற இரண்டாவது குழுவை சேர்ந்த நபர் என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

சுனிதா வில்லியம்ஸ்க்கு முன்னதாக கல்பனா சாவ்லா எனும் இந்திய வம்சாவளியை சேர்ந்த வீராங்கணை விண்ணுக்கு பறந்திருக்கிறார். நாசா மூலம் விண்வெளிக்கு பறந்த முதல் இந்திய வம்சாவளி பெண் கல்பனாதான். ஆனால் கடந்த 2003ம் ஆம் ஆண்டு அவர் பயணித்த ஸ்பேஸ் ஷிப் பூமிக்கு திரும்பும் போது திடீரென வெடித்து சிதறியது. இதில் அவருடன் பயணித்த 7 விண்வெளி வீரர்களும் உயிரிழந்தனர். 

விண்வெளியில் சிக்கிய விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து  கடந்த 5 ஆம் திகதி  ஸ்டார் லைனர்   சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு   புறப்பட்டது.    சுனிதா வில்லியம்ஸூம், அவருடன் சக விண்வெளி வீரராக புட்ச் வில்மோரும் சென்றனர். இரண்டு நாட்கள் கழித்து,   ஜூன் 7ம் திகதி  ஸ்டார் லைனர் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. இது சுனிதா வில்லியம்ஸ்ஸுக்கு மூன்றாவது பயணமாகும்.இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ளார். அவர்கள்  பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த சிக்கல் விரைவில் சரிசெய்யப்படவில்லையெனில் இப்பயணம் ஆபத்தில் முடியும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், விமானம் தயாரிப்பு நிறுவனமான போயிங், ஸ்பேஸ் ஷிப்பை தயாரித்திருக்கிறது. ஸ்டார் லைனர் என்று பெயரிடப்பட்ட இந்த ஸ்பேஸ் ஷிப் சர்வதேச விண்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை அழைத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.இதற்கு முன்னர் வரை நாசாதான் இந்த பணிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால், விண்வெளி துறையில் தனியாரை ஊக்குவிக்கும் விதமாக போயிங் நிறுவனத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கெனவே எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இதேபோல ஸ்பேஸ் ஷிப்களை வடிவமைத்திருக்கிறது. எனவே போயிங் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 'ஸ்டார் லைனர்' எனும் ஸ்பேஸ் ஷிப்பை வடிவமைத்திருந்தது.இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இரண்டு மூன்று முறை ஸ்டார் லைனரின் பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.7ம் திக‌தி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற அவர்கள்  14ம் திக‌தி மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட மற்றொரு தொழில்நுட்ப கோளாறு ஆகியவை இந்த பயணத்தை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி தள்ளி போட்டது.  ஜூன் 26ம் திக‌தி   இவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால். ஸ்டார் லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால்,   இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர்.இது நாசா விஞ்ஞானிகளிடையே லேசான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஜூலை 2ம் திக‌தி அனைத்து தொழில்நுட்ப கோளாறுகளும் சரி செய்யப்பட்டு இரண்டு வீரர்களும் பூமிக்கு பத்திரமாக அழைத்துவரப்படுவார்கள் என போயிங் தெரிவித்திருக்கிறது. சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்ப 6 மணி நேரங்கள் தேவைப்படும். இந்த 6 மணி நேர பயணத்தில் த்ரஸ்டர் ஃபெயிலியர், வால்வு சிக்கல்கள் மற்றும் ஹீலியம் வாயு கசிவு ஆகிவை இல்லாமல் இருக்க வேண்டும். ஒருவேளை இந்த பிரச்சனை சரி செய்யப்படவில்லையெனில், கல்பனா சாவ்லாவுக்கு நேர்ந்ததை போல சுனிதாவுக்கும் நேரலாம் என்று விண்வெளி ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி துறையில் ஏராளமான சாதனைகளை படைத்திருக்கிறார். இவர் அடிப்படையில் ஒரு கடற்படை விமானியாவார். கடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக நாசா மூலம் விண்வெளிக்கு சென்றார். அதன் பின்னர் பல முறை விண்வெளிக்கு சென்று வந்திருக்கிறார். இதுவரை 322 நாட்களை அவர் விண்ணில் கழித்திருக்கிறார். அதுமட்டுமின்றி விண்ணில் நெடுநேரம் நடைபயின்ற முதல் பெண் என்ற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார்.ஸ்டார் லைனர் மூலம் பயணம் மேற்கொண்ட சுனிதா, தனியார் ஸ்பேஸ் ஷிப் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற இரண்டாவது குழுவை சேர்ந்த நபர் என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறார்.சுனிதா வில்லியம்ஸ்க்கு முன்னதாக கல்பனா சாவ்லா எனும் இந்திய வம்சாவளியை சேர்ந்த வீராங்கணை விண்ணுக்கு பறந்திருக்கிறார். நாசா மூலம் விண்வெளிக்கு பறந்த முதல் இந்திய வம்சாவளி பெண் கல்பனாதான். ஆனால் கடந்த 2003ம் ஆம் ஆண்டு அவர் பயணித்த ஸ்பேஸ் ஷிப் பூமிக்கு திரும்பும் போது திடீரென வெடித்து சிதறியது. இதில் அவருடன் பயணித்த 7 விண்வெளி வீரர்களும் உயிரிழந்தனர். 

Advertisement

Advertisement

Advertisement