• May 03 2024

இலங்கை மக்களுக்கு அடித்த அதிஸ்டம் - குறையும் பொருட்களின் விலைகள்

harsha / Dec 13th 2022, 3:58 pm
image

Advertisement

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பித்து, தென்னிந்தியாவிற்கும் காங்கசன்துறை, திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் திரு.நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். .
 
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இத்திட்டத்தின் முதற்கட்டமாக காங்கேசன்துறைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவை எதிர்வரும் ஜனவரி மாதத்தின் மத்தியில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
 
அதற்கு இந்திய அரசாங்கத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
 
தம்பதீவ யாத்திரைக்கு செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களுக்கும் இந்த பயணிகள் படகு சேவை பெரும் நிவாரணமாக அமையும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
 
ஒரு பயணத்திற்கு ஒரு பயணிக்கு சுமார் 60 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படும் என்றும், 100 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்றும் படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மக்களுக்கு அடித்த அதிஸ்டம் - குறையும் பொருட்களின் விலைகள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பித்து, தென்னிந்தியாவிற்கும் காங்கசன்துறை, திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் திரு.நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். . துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இத்திட்டத்தின் முதற்கட்டமாக காங்கேசன்துறைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவை எதிர்வரும் ஜனவரி மாதத்தின் மத்தியில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அதற்கு இந்திய அரசாங்கத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். தம்பதீவ யாத்திரைக்கு செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களுக்கும் இந்த பயணிகள் படகு சேவை பெரும் நிவாரணமாக அமையும் என அமைச்சர் வலியுறுத்தினார். ஒரு பயணத்திற்கு ஒரு பயணிக்கு சுமார் 60 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படும் என்றும், 100 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்றும் படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement