• May 21 2024

சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்ற வைத்திய அதிகாரி மீது தாக்குதல்

Chithra / Jan 3rd 2023, 8:40 am
image

Advertisement

பதுளை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ச மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுமியொருவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் வைத்தியசாலையில் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளதுடன் வைத்தியர் பாலித ராஜபக்சவை தாக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில், வைத்தியர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதுளை பொது வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்தியர் பாலித ராஜபக்ச, விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்காக நள்ளிரவில் கால்சட்டையுடன் அவசரமாக மருத்துவமனைக்கு வருகை தந்து சிகிச்சையளித்தமை சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்ற வைத்திய அதிகாரி மீது தாக்குதல் பதுளை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ச மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நேற்றைய தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுமியொருவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் வைத்தியசாலையில் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளதுடன் வைத்தியர் பாலித ராஜபக்சவை தாக்கியுள்ளனர்.சம்பவம் தொடர்பில், வைத்தியர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதுளை பொது வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வைத்தியர் பாலித ராஜபக்ச, விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்காக நள்ளிரவில் கால்சட்டையுடன் அவசரமாக மருத்துவமனைக்கு வருகை தந்து சிகிச்சையளித்தமை சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement