• Nov 28 2024

பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்...! பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை...!samugammedia

Sharmi / Dec 5th 2023, 12:53 pm
image

நான்கு மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக களனிப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த நான்கு மாணவர்களின் பல்கலைக்கழகத்தின் படிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நேற்று (04) பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்படி, களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனையவை நேற்று பிற்பகல் 2 மணி முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என உபவேந்தர் அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழக பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஓய்வறையில் உறங்கிக் கொண்டிருந்த போது, ​​அவரை கடத்தி, தடுத்து வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு, சமாதானத்தை ஏற்படுத்தியதாக உபவேந்தர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஆராய பல்கலைக்கழக நிர்வாகம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல். பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை.samugammedia நான்கு மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக களனிப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.குறித்த நான்கு மாணவர்களின் பல்கலைக்கழகத்தின் படிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நேற்று (04) பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.இதன்படி, களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனையவை நேற்று பிற்பகல் 2 மணி முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என உபவேந்தர் அறிவித்துள்ளார்.பல்கலைக்கழக பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஓய்வறையில் உறங்கிக் கொண்டிருந்த போது, ​​அவரை கடத்தி, தடுத்து வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு, சமாதானத்தை ஏற்படுத்தியதாக உபவேந்தர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பில் ஆராய பல்கலைக்கழக நிர்வாகம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement