இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு முன்னதாகவே பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக மும்பை பொலிஸார் புதன்கிழமை (12) தெரிவித்துள்ளனர்.
இந்தியப் பிரதமர் தனது உத்தியோகபூர்வ பயணத்திற்காக வெளிநாட்டிற்குச் செல்லும்போது மும்பை காவல்துறைக்கு செவ்வாய்க்கிழமை (11) தாக்குதல் எச்சரிக்கை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரதமர் உத்தியோகபூர்வ பயணமாக வெளிநாட்டிற்குச் செல்லும் வேளையில் அவரது விமானம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அச்சுறுத்தலின் தீவிர தன்மையைக் கருத்தில் கொண்டு, மும்பை காவல்துறை மற்ற தொடர்புடைய நிறுவனங்களுக்கு தகவல் அளித்து விசாரணையைத் தொடங்கியது. விசாரணையின் பின்னணியில் தாக்குதல் அச்சுறுத்தல் அழைப்பு விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த நபர் “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என்றும், மும்பையின் செம்பூர் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டதாகவும் மும்பை பொலிஸார் தெரிவித்தனர். அதேநேரம், இது தொடர்பான மேலதிக விசாரணையினையும் மும்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியப் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்துக்கு முன்னதாக தாக்குதல் அச்சுறுத்தல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு முன்னதாகவே பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக மும்பை பொலிஸார் புதன்கிழமை (12) தெரிவித்துள்ளனர்.இந்தியப் பிரதமர் தனது உத்தியோகபூர்வ பயணத்திற்காக வெளிநாட்டிற்குச் செல்லும்போது மும்பை காவல்துறைக்கு செவ்வாய்க்கிழமை (11) தாக்குதல் எச்சரிக்கை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, பிரதமர் உத்தியோகபூர்வ பயணமாக வெளிநாட்டிற்குச் செல்லும் வேளையில் அவரது விமானம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.அச்சுறுத்தலின் தீவிர தன்மையைக் கருத்தில் கொண்டு, மும்பை காவல்துறை மற்ற தொடர்புடைய நிறுவனங்களுக்கு தகவல் அளித்து விசாரணையைத் தொடங்கியது. விசாரணையின் பின்னணியில் தாக்குதல் அச்சுறுத்தல் அழைப்பு விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அந்த நபர் “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என்றும், மும்பையின் செம்பூர் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டதாகவும் மும்பை பொலிஸார் தெரிவித்தனர். அதேநேரம், இது தொடர்பான மேலதிக விசாரணையினையும் மும்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.