• May 07 2025

பெண்களை களவாக அனுப்பிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 6 அதிகாரிகள் பதவி இடைநீக்கம்

Chithra / May 7th 2025, 8:58 am
image

 

பயிற்சி பெறாத பெண்களை வெளிநாட்டு வேலைகளுக்காக கடத்தியதுடன் தொடர்புடைய 2.5 பில்லியன் ரூபாய் மோசடி தொடர்பில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது மேலாளர் உட்பட ஆறு அதிகாரிகள் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தகவல்களின்படி, 2022 மற்றும் ஓகஸ்ட் 2024 க்கு இடையில், சுமார் 35,000 பெண்கள் கட்டாய முன் புறப்படும் பயிற்சியை முடிக்காமலேயே வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

இதன்போது குறித்த பெண்களிடம் இருந்து தலா 100,000 ரூபாய் முதல் 140,000 வரை வசூலிக்கப்பட்டதாகவும், முன் அனுபவத்தை பொய்யாக சான்றளிக்க போலி ஆவணங்கள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த மோசடி ஊடகங்களால் அம்பலப்படுத்தப்பட்ட நிலையிலேயே தொடர்புயை 6 அதிகாரிகள் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களை களவாக அனுப்பிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 6 அதிகாரிகள் பதவி இடைநீக்கம்  பயிற்சி பெறாத பெண்களை வெளிநாட்டு வேலைகளுக்காக கடத்தியதுடன் தொடர்புடைய 2.5 பில்லியன் ரூபாய் மோசடி தொடர்பில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது மேலாளர் உட்பட ஆறு அதிகாரிகள் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தகவல்களின்படி, 2022 மற்றும் ஓகஸ்ட் 2024 க்கு இடையில், சுமார் 35,000 பெண்கள் கட்டாய முன் புறப்படும் பயிற்சியை முடிக்காமலேயே வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.இதன்போது குறித்த பெண்களிடம் இருந்து தலா 100,000 ரூபாய் முதல் 140,000 வரை வசூலிக்கப்பட்டதாகவும், முன் அனுபவத்தை பொய்யாக சான்றளிக்க போலி ஆவணங்கள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.இந்த மோசடி ஊடகங்களால் அம்பலப்படுத்தப்பட்ட நிலையிலேயே தொடர்புயை 6 அதிகாரிகள் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement