கேகாலை - தெரணியகல பிரதேச சபைக்கு போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின்வேட்பாளர் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவமானது, நேற்று திக்வெல்ல கந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
அடையாளந் தெரியாத நபர்களால் இந்த கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன்,பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிக்கப்படுகிறது.
அத்தோடு, மோதலில் ஈடுபட்டு காயமடைந்த மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, மத்துகம, எதுலத் முதலி மகா வித்தியாலயத்திற்கு பின்னால் உள்ள வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மீது கத்தி குத்து தாக்குதல் கேகாலை - தெரணியகல பிரதேச சபைக்கு போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின்வேட்பாளர் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.குறித்த தாக்குதல் சம்பவமானது, நேற்று திக்வெல்ல கந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.அடையாளந் தெரியாத நபர்களால் இந்த கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன்,பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிக்கப்படுகிறது.அத்தோடு, மோதலில் ஈடுபட்டு காயமடைந்த மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.இதேவேளை, மத்துகம, எதுலத் முதலி மகா வித்தியாலயத்திற்கு பின்னால் உள்ள வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.